search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports competition"

    • 8 விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
    • எட்டு பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 8 விளையாட்டு வீரர்களுக்கும், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    அசாம் மாநிலம், கவுகாத்தியில் கடந்த 10.1.2020 முதல் 22.1.2020 வரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 19 தங்கப்பதக்கம், 30 வெள்ளி பதக்கம் மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள், என மொத்தம் 69 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 137 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.

    கடந்த 2020 அக்டோபர் 10 முதல் 25 வரை நடை பெற்ற ஆசிய ஆன்லைன் நேஷன்ஸ் கோப்பைக்கான சதுரங்கப் போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்று தங்கப் பத்தக்கங்கள் வென்ற பி.வி. நந்திதா மற்றும் ஆர்.வைஷாலி ஆகிய இருவருக்கும் உயரிய ஊக்கத் தொகையாக தலா 6 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

    குஜராத் மாநிலம், காந்தி நகரில் கடந்த 21.3.2021 முதல் 25.3.2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான 15-வது ஜுனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 1 தங்கப் பதக்கம் மற்றும் குழுப்போட்டிகளில் 1 தங்கப் பதக்கம், என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 9 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.

    லண்டன், பர்மிங்காமில் கடந்த 10.8.2022 முதல் 20.8.2022 வரை நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் சேபர் குழுப் போட்டியில் வெண் கலப்பதக்கம் வென்ற ஜே.எஸ்.ஜெபர்லினுக்கு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

    சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 8.1.2020 முதல் 10.1.2020 வரை நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான கராத்தே போட்டிகளில் தனிநபர் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கம், ஆண்கள் குழுப் போட்டியில் 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் பெண்கள் குழுப்போட்டியில் 1 வெள்ளிப் பதக்கம், என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 11 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக 19 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

    என மொத்தம் 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 8 விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்றுநர்களுக்கான நேர்முக தேர்வு 2.3.2023 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு விளையாட்டுகளை சார்ந்த 187 விளையாட்டு பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.

    தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 76 பயிற்று நர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாத ரெட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி-நாடார் மேல்நிலைப்பள்ளியில் 104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாவிருத்தி சங்கம் உறவின் முறைக்குபாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி 104-வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.

    53-வது வார்டு உறுப்பினர் அருண்குமார், உதவி பொறியாளர் ராம்சுப்பு ஆகியோர் தொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். பள்ளி செயலாளர் குணசேகரன், உறவின் முறை தலைவர் கணபதி ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    பேரணி காமராஜர் விளையாட்டு திடலில் தொடங்கி மதுரை கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நடந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் (சட்டம், ஒழுங்கு) ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றினார்.வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பள்ளி கொடியை பள்ளி செயலாளர் குணசேகரன் ஏற்றினார். சந்திரசேகரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

    வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டும், பாரம்பரிய ஒயிலாட்டத்துடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    உறவின் முறை தலைவர் கணபதி, பொருளாளர் ராஜன், செயலாளர் மயில்ராஜன், துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணை செயலாளர் அருஞ்சுனை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமையுரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் வாழ்த்தி பேசினார்.

    நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் காந்திபாய் சுவாடியடியாள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நாகநாதன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது.
    • சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மதுரை மாவட்ட நேரு யுகேந்திரா, போடிநாயக்கன்பட்டி சாஸ்தா மகளிர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    கருப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா தொடங்கி வைத்தார். கபடி, குண்டு, ஈட்டி, வட்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

    இதில் மாணவர் பிரிவில் சர்க்கரை ஆலை பள்ளி கபடி போட்டியிலும், வாடிப்பட்டி தனியார் கல்லூரி மாணவிகள் கைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் பரிசு வழங்கினார்.

    நேரு யுவகேந்திரா மாநில இயக்குநர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தனியார் கல்வி அறக்கட்டளை சேர்மன் ஆண்டி, தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி முன்னிலை வகித்தனர்.

    சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார். உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜா, செந்தில்குமார், சந்திரமோகன், வெள்ளைச்சாமி, வசந்தகுமார் ஆகியோர் நடுவராக இருந்தனர். வசந்த் நன்றி கூறினார்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
    • வீதிகளுக்கு ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

    திருப்பூர் :

    உலக மகளிர் தினத்தையொட்டி திருப்பூர் ஒன்றியம் வள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழு மகளிர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.பரிசுகள் வழங்கினார். இதில் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் அனைவருக்கும் மா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக பசுமை நகரில் உள்ள வீதிகளுக்கு ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணம்மாள் ராமசாமி, சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    • தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • டி.என்.டி.றி.ஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியின் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் டி.என்.டி.றி.ஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியின் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள் வாலிபால் விளையாட்டில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், 14 வயதிற்குட்பட்டவர் பிரிவில் மாணவர்கள் கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடமும், சிலம்ப போட்டியில் 14 வயதிற்குட்பட்ட 30 கிலோ எடை பிரிவில் மாவட்ட அளவில் 3-ம் இடமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற வீரர்களையும், பயிற்சி அளித்த உடற் கல்வி ஆசிரியர்கள் வசந்த் ஜெபத்துரை, ராஜேஷ் ஜெயசீலன், அக்னஸ் ஆகியோரை பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தேசிய விளையாட்டு போட்டியில் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
    • இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    அகில இந்திய வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அரியானா மாநிலம் ஹிஸாரில் உள்ள சி.சி.எஸ். அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

    இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அங்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

    காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவர் கார்த்தீஸ்வரன் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு வட்டு எறிதல் போட்டியில் 2ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

    வெற்றி பெற்ற மாணவருக்கு சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் சேது குமணன், கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் 20வது ஆண்டு விளையாட்டி போட்டி நடந்தது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

     சென்னை:

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில 20-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். கருப்பையா முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பா.சிம்மசந்திரன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மாநில பொது செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தடகளம், வாலிபால், டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் விளையாட்டு தின விழா போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டுதினவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வாலிபால் அசோசியேசன் திருப்பூர் மாவட்ட தலைவரும் எனிடைம் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
    • இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். பின்னர் கல்லூரி மாணவ, மாணவியர்களின் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவுடன் இணைந்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில், கால்பந்து, கையுந்து பந்து, கபடி, மேசை பந்து உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதேபோன்று மாவட்ட அளவிலானப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்று நமது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வீரர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தடகள விளையாட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை தென்காசி மாவட்டத்திற்கு பெற்று தரவேண்டும் என கலெக்டர்தெரிவித்தார்.

    தென்காசி:

    தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை 2022-2023-ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் கோப்பை

    இதில் முதல்கட்டமாக தடகள விளையாட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில், அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறுவதற்காக அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கல்வி துறையின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வருகிற பொதுத்தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம், விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் 14 பிரிவுகளில் இன்று முதல் தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    கலந்து கொண்டவர்கள்

    அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை தென்காசி மாவட்டத்திற்கு பெற்று தரவேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, சதன்திருமலைக்குமார், முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் வினு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி யூனியன் சேர்மன் சேக்அப்துல்லா, துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பரமகுரு, இ.சி.ஈ.அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் செந்தூர்பாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பல்வேறு விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி எம்.கே.வி கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
    • 14 வயது பிரிவில் 7-ம் வகுப்பு படிக்கும் சாய் பிரேமா என்ற மாணவி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 6 பதக்கங்களையும், 7 சான்றுகளையும் பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி எம்.கே.வி கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வயதுக்கான பிரிவுகளில் பல மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றனர். இவர்களில் 14 வயது பிரிவில் 7-ம் வகுப்பு படிக்கும் சாய் பிரேமா என்ற மாணவி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 6 பதக்கங்களையும், 7 சான்றுகளையும் பெற்றார். 400 மீட்டர் ரிலே ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 80 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடமும், பந்து எறிதல், 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் ஆகியவற்றில் இரண்டாம் இடமும், கைப்பந்து போட்டியில் வெற்றியும் பெற்றார். இவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. போட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்தார்.

    இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசியதாவது:- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளின் பரிசுத்தொகை இந்த ஆண்டு ரூ.25 கோடி வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000-ம் வழங்கப்படும். மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. கபடி, சிலம்பம், தடகளம், கால்பந்து, கூடைபந்து, இறகுபந்து, மேசைப்பந்து, ஆக்கி, நீச்சல், கிரிக்கெட், கைப்பந்து போட்டிகள் உள்பட பல போட்டிகள் நடக்கிறது. மாவட்ட அளவில் தனிநபர் தடகள பிரிவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டிகளில் பெறும் சான்றிதழ்கள் மூலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெறலாம். போட்டியில் திறமையானவர்களை கண்டறிவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்து தொடர் பயிற்சிகள் வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×