search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுய உதவி குழு"

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க உத்திரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான 132 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 93 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 46 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 44 மனுக்களும், இதர மனுக்கள் 184 ஆக மொத்தம் 531 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக 6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை யினையும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.22,320 மதிப்பீடிலும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பாதுகாவலர் சான்று மற்றும் ஒரு பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.6,800 மதிப்பீட்டிலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வாயிலாக ஒரு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையை யும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது
    • மகளிர் கூட்டமைப்பினர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமளாபுரம் பகுதி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் மகளி ர்சுய உதவிக்குழுவி னருக்கு சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பைகள், வயர்கூடைகள் ஆகியவற்றை உபயோக ப்படுத்த க்கோரியும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சாமளாபுரம் பகுதி அளவி லான மகளிர் கூட்டமைப்பி னர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு மகளிர் குழுவினருக்கு விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழ னிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் மைதிலிபிரபு, பூங்கொடி சண்முகம், பெரிய சாமி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியம்மாள் ,சாமளாபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் ரம்யா, சாமளாபுரம் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது
    • பொதுத் தேர்வை தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் எழுதவில்லை

    நாகர்கோவில், 

    குமரி மாவட்ட அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நேற்று நடை பெற்றது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் அமைச்சர் பச்சைமால், கழக இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கிழக்கு கழக பகுதி செயலாளர் வக்கீல் ஜெயகோபால் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 28 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தீய செயல்களை நினைவு கூட்டம் என்ற பெயரில் கூட்டம். நடத்தி பிரச்சினையை தி.மு.க. உருவாக்கி உள்ளது.

    தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றவில்லை. தொற்று பாதிப்பு காலங்களில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட வில்லை. குமரி மாவட்டத் தில் உள்ள ஒரு குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை. தண் ணீர் தட்டுப்பாடு உள்ளது. அரசு கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதிலும், பேனா வைப்பதிலும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டு கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக உள்ளது. தி.மு.க.வில் அதிக அளவில் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். எனவே தி.மு.க. என்பதை விட அதி.மு.க. 2-ம் பாகம் என கூறினால் பொருந்தும்.

    பொதுத் தேர்வை தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் எழுதவில்லை. இதுவே தி.மு.க. அரசின் சாதனை ஆகும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண் போலீசாருக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது.

    அ.தி.மு.க. அரசால் கொண்டு வந்த அம்மா உணவகம், அம்மா மருந்தகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களை தி.மு.க. அரசு நசுக்கி வரு கிறது. மக்க ளுக்கான அரசு தி.மு.க. இல்லை. அது குடும்ப அரசாக உள்ளது. ஈரோடு இடைத் தேர்தல் மூலம் தேர்தல் ஆணையம் முழுமையாக தோல்வியடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அவைத் தலைவர் சேவியர் மனோக ரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம், நகர முன்னாள் செயலாளர் சந்துரு, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் அக் ஷயாகண்ணன் நன்றி கூறி னார்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
    • வீதிகளுக்கு ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

    திருப்பூர் :

    உலக மகளிர் தினத்தையொட்டி திருப்பூர் ஒன்றியம் வள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழு மகளிர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.பரிசுகள் வழங்கினார். இதில் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் அனைவருக்கும் மா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக பசுமை நகரில் உள்ள வீதிகளுக்கு ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணம்மாள் ராமசாமி, சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    • இந்திய கூட்டுறவு வாரவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது.
    • பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    சென்னை :

    கோவையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிப்பதற்கும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து, அதை சிறப்பாக வழிநடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

    கூட்டுறவின் நோக்கம் என்பது பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் செய்கின்ற விவசாயமாக இருந்தாலும், நெசவுத்தொழிலாக இருந்தாலும், கைவினைஞர்களாக இருந்தாலும், அவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்து ஒரு கூட்டமைப்பாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை வழங்கி சேவை செய்வதாகும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வட்டியில்லாமல் கடன் வழங்கியதிலும் தமிழகம்தான் முன்னோடி. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வட்டியில்லாமல் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான நகைக்கடன் தள்ளுபடியில் ரூ.5,018 கோடி கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,888.88 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுயஉதவி குழு கடனை பொறுத்தவரை ரூ.2,755 கோடி வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு கொடுத்திருக்கிறோம். பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்த வைப்பீடு ரூ.67 ஆயிரம் கோடிதான்.

    இந்த ஆண்டு இந்த 6 மாத காலத்தில் ரூ.66 ஆயிரம் கோடி வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மக்கள் இதில் வைப்பீடு செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார்.
    • வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். கடந்த சில மாதங்களாக குழுவில் கண்ணதாசன் பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணதாசன் மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் வளர்மதி, பழனிவேல், சந்துரு, சாரதி மற்றும் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் கண்ணதாசன், காளிமுத்து என 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • 100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் வட்டார அளவிலான 100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மதுரை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் காளிதாசன் வழங்கினார். இதில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள சுய உதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வங்கிகளின் கிளை மேலாளர்கள் கலந்து கொண்டு காசோலைகளை மகளிர் குழுவினருக்கு வழங்கினர். இந்த நிகழ்வில் மகளிர் குழுக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், இயற்கை உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    • உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாஞானசேகரன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு துணைத்தலைவர் வசந்திகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். கடனுதவி பெற்ற அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்றார். இதில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பொன்.சசிக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்
    • கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயி ரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். சுய உதவிகுழுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.80 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், சுய உதவிகுழுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டிலும், அதிக பட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்ப டுகிறது.

    கைவினை கலைஞர்க ளுக்கு ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

    சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்க ப்படுகிறது. சுய உதவி குழுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற் கல்வி, தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்க ளுக்கு அதிகப்பட்சமாக தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டியிலும், சுய உதவிகுழுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் மாணவர்க ளுக்கு 8 சதவீத வட்டியிலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே குமரி மாவட்டத் தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை, அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும்தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஒட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண் டும்.

    கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      

    • நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
    • தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டம் ஞாலம் கிராமத்தில் ரூ.18 கோடியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது.

    கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தரேஷ் அகமது, மகளிர் திட்ட மேலாண்ைம இயக்குனர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், எம்.எல்.ஏ.க்கள் ராேஜஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சுயதொழில் பிரிவில் கடன் உதவி வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அைமச்சர் பெரிய கருப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நாட்டிலேயே நம்பர்-1 முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். அவருடைய பணி சிறப்பாக உள்ளதாக அனைத்து வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வந்தாலும் ஊரக வளர்ச்சி துறைக்கு கூடுதல் சிறப்பு உண்டு.

    ஏனெனில் இந்தத் துறையின் மூலமாகதான் கிராமப்புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முடிகிறது. முக்கிய மாக கிராமமக்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்ந்து விடக்கூடாது என்பதே இந்த துறையின் நோக்கம் ஆகும்.

    தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டம் ஞாலம் கிராமத்தில் ரூ.18 கோடியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதி கிடைத்துள்ளது. அந்த குடியிருப்புகள் தகுதி யான நபர்களுக்கு வழங்கப் பட உள்ளது.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றவுடன் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப் பட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றனர்.

    தமிழகத்தில் எல்.இ.டி. விளக்கு, உயர்கோபுர விளக்கு ஆகியவற்றை சரி செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டதாக கேட் கிறீர்கள். கடந்த ஆட்சியில் தெருவிளக்கு அமைத்தலில் ஊழல் நடந்துள்ளது.

    எனவே தான் தற்போது தெருவிளக்குகளை சரி செய்வது நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இது தொடர் பாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தெரு விளக்கு களை என்ன விலையில் வாங்குவது? எங்கிருந்து வாங்குவது? என்பது குறித்து அந்த குழு அறிக்கை அனுப்பியதும் உடனடியாக தெருவிளக்குகள் சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×