search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி
    X

    சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி

    • நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
    • தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டம் ஞாலம் கிராமத்தில் ரூ.18 கோடியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது.

    கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தரேஷ் அகமது, மகளிர் திட்ட மேலாண்ைம இயக்குனர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், எம்.எல்.ஏ.க்கள் ராேஜஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சுயதொழில் பிரிவில் கடன் உதவி வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அைமச்சர் பெரிய கருப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நாட்டிலேயே நம்பர்-1 முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். அவருடைய பணி சிறப்பாக உள்ளதாக அனைத்து வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வந்தாலும் ஊரக வளர்ச்சி துறைக்கு கூடுதல் சிறப்பு உண்டு.

    ஏனெனில் இந்தத் துறையின் மூலமாகதான் கிராமப்புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முடிகிறது. முக்கிய மாக கிராமமக்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்ந்து விடக்கூடாது என்பதே இந்த துறையின் நோக்கம் ஆகும்.

    தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டம் ஞாலம் கிராமத்தில் ரூ.18 கோடியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதி கிடைத்துள்ளது. அந்த குடியிருப்புகள் தகுதி யான நபர்களுக்கு வழங்கப் பட உள்ளது.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றவுடன் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப் பட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றனர்.

    தமிழகத்தில் எல்.இ.டி. விளக்கு, உயர்கோபுர விளக்கு ஆகியவற்றை சரி செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டதாக கேட் கிறீர்கள். கடந்த ஆட்சியில் தெருவிளக்கு அமைத்தலில் ஊழல் நடந்துள்ளது.

    எனவே தான் தற்போது தெருவிளக்குகளை சரி செய்வது நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இது தொடர் பாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தெரு விளக்கு களை என்ன விலையில் வாங்குவது? எங்கிருந்து வாங்குவது? என்பது குறித்து அந்த குழு அறிக்கை அனுப்பியதும் உடனடியாக தெருவிளக்குகள் சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×