search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "self help group"

    • முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
    • மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    புதுவை அரசு சார்பில் ரூ.2638 கோடி கடன் 1.42 லட்சப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தாகூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த விழாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமை தாங்கினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் புதுவையைச் சுற்றியுள்ள 141 சுய உதவிக் குழுக்களின் 1672 உறுப்பி னர்களுக்கு பவ்டா நிதி நிறுவன மேலாண்மை இயக்குநர் செ.ஜாஸ்லின் தம்பி, முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

    இந்த கடிதம் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன், துணை பொது மேலாளர் ஜனதீஸ்வர் காரி, துணை பொது மேலாளர் கல்பனா முதலியார், சேலம், மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில்  வழங்கப்பட்டது.பவ்டா நிதி நிறுவனத்தின் சார்பில் முதுநிலை உதவிப் பொது மேலாளர் சிவராஜ், உதவிப் பொது மேலாளர் மகேஷ்வரி, முதுநிலை உதவிப் பொது மேலாளர் சங்கர், உதவிப் பொது மேலாளர்கள் பிரேம்குமார், கார்திக்கேயன், கிளை மேலாளர்கள் பிரபாவதி, முருகன், முருகேஷ், ஹரி கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க உத்திரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான 132 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 93 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 46 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 44 மனுக்களும், இதர மனுக்கள் 184 ஆக மொத்தம் 531 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக 6 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை யினையும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.22,320 மதிப்பீடிலும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பாதுகாவலர் சான்று மற்றும் ஒரு பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.6,800 மதிப்பீட்டிலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வாயிலாக ஒரு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையை யும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்தால் அவர்களுக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாமாக முன் வந்து நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது.
    • போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழுவாக சேர்ந்து பெண்கள் தொழில் தொடங்கி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இந்த தொகை பெரிதும் உதவியாக இருந்து வந்தது.

    ஆனால் காலப்போக்கில் குடும்ப செலவுக்காக குழு அமைத்து பெண்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்தால் அவர்களுக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாமாக முன் வந்து நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது.

    பணம் கொடுக்கும் போது கணவன்-மனைவி 2 பேரின் ஒப்புதலோடு வழங்கப்படுவதால் தொகை வசூலிக்கும் போது வீட்டில் வந்து பணம் கொடுக்கும் வரை இருந்து நிதி நிறுவன ஊழியர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    கடனை செலுத்த முடியாத போது மற்றொரு நிறுவனத்தில் கடன் பெற்று அடைத்து விடுகின்றனர். அந்த நிறுவனத்துக்கும் கடனை செலுத்த முடிய வில்லை என்றால் வேறு ஒரு நிறுவனத்தில் கடனை பெற்று விடுகின்றனர்.

    இதனால் அவர்கள் மேலும் மேலும் கடனாளியாகி மன அழுத்தத்துக்கு உள்ளாகி விடுகின்றனர். அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதில் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவர் கடன் பெற்றிருந்தால் மீண்டும் வேறொரு வங்கியில் அவருக்கு கடன் வழங்க முடியாது. ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களிடம் தாராளமாக கடன் உதவியை வழங்கி விடுகின்றனர்.

    இதனால் தினசரி வீட்டு வாசல் முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை கேட்டு வந்து விடுகின்றனர். ஒரு குழுவில் ஒருவர் பணம் கட்ட வில்லையென்றாலும் மொத்த உறுப்பினரும் அதற்கு பொறுப்பாளியாக மாற்றப்படுகிறார்கள். பணம் கிடைக்கும் வரை இரவு 8 மணி ஆனால் கூட வாசலிலேயே அமர்ந்து வசூல் செய்து செல்கின்றனர்.

    ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்லும் நிலையில் அவரது தலையில் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் கடன் திணிக்கப்படு கிறது. கடனை கொடுக்க முடியாமல் வெளியூர் சென்று விடுவதும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வதும் நடந்து வருகிறது.குறிப்பாக கிராமப்புற மக்களிடம் மட்டுமே இது போன்ற கடன் உதவியை தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மட்டும் காவல் துறை இது போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    • தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 400 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.61 கோடி மதிப்பிலான கடனுதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    நெல்லை:

    தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.

    ரூ.61 கோடி கடனுதவி

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் கடனுதவி வழங்கும் விழா நடை பெற்றது. பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்ற விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், உதவி கலெக்டர் கோகுல், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்க பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 400 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.61 கோடி மதிப்பிலான கடனுதவி களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    கண்காட்சி

    தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பனை பொருட்களின் கண்காட்சியை சபாநாயகர் பார்வையிட்டார்.

    முன்னதாக ஸ்டார்ட் - அப் என்ற புத்தாக்க தொழில் என்று புதிதாக பதிவு செய்யப்பட்ட 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சான் றிதழ்கள் வழங்கப்பட்டு, அவர்களின் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    • இந்திய கூட்டுறவு வாரவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது.
    • பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    சென்னை :

    கோவையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிப்பதற்கும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து, அதை சிறப்பாக வழிநடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

    கூட்டுறவின் நோக்கம் என்பது பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் செய்கின்ற விவசாயமாக இருந்தாலும், நெசவுத்தொழிலாக இருந்தாலும், கைவினைஞர்களாக இருந்தாலும், அவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்து ஒரு கூட்டமைப்பாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை வழங்கி சேவை செய்வதாகும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வட்டியில்லாமல் கடன் வழங்கியதிலும் தமிழகம்தான் முன்னோடி. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வட்டியில்லாமல் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான நகைக்கடன் தள்ளுபடியில் ரூ.5,018 கோடி கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,888.88 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுயஉதவி குழு கடனை பொறுத்தவரை ரூ.2,755 கோடி வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு கொடுத்திருக்கிறோம். பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்த வைப்பீடு ரூ.67 ஆயிரம் கோடிதான்.

    இந்த ஆண்டு இந்த 6 மாத காலத்தில் ரூ.66 ஆயிரம் கோடி வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மக்கள் இதில் வைப்பீடு செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரூ. 47லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் பரிசு தொகை வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ. 47லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடனுதவி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 10-ம் மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் இரண்டு நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் பரிசு தொகை வழங்கினார். பின்னர் சலவை தொழிலா ளர்களுக்கு இஸ்திரி பெட்டி வழங்கினார்.

    இதை தொடர்ந்து தென்திருப்பேரையில் வருவாய் துறை அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பையும், மேல கடம்பாவில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான், திருச்செந்தூர் கோட்டா ச்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், வருவாய் அலுவலர் முத்து ராமன், தென்திருப்பேரை பேரூராட்சி நிர்வாக அதிகாரி ரமேசு பாபு, இளநிலை உதவியாளர் சேக்அகமது,

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தென்தி ருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், அவைத் தலை வர் மகரபூஷணம், தென் திருப்பேரை நகரச்செயலாளர் முத்துவீரப்பெருமாள், தென்திருப்பேரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஆனந்த், ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், நகர அவைத்தலைவர் சுப்பையா, ஆழ்வை மத்திய ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவர் அமிர்தவள்ளி துரைராஜ், மாவட்ட பிரதிநிதி பாலச்சந்திரன், தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், ஒன்றிய தொண்டரணி ராஜேஷ், ஒன்றிய பிரதிநிதி சந்தானமுத்து, கிளை செயலாளர் மாரிமுத்து, கவுன்சிலர்கள் சீதாலெட்சுமி மாரியம்மாள், சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள் மோகன், ஆர்த்திகுமார், கண்ணன், ராகவன், சுடலையாண்டி, சீனிவாசன், முருகன், அன்புத் துரை, கல்லை ராஜேந்திரன், ஞான பிரகாசம், பொன்ராஜ், கடம்பாரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லையா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழுவின் 16-வது ஆண்டு விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் காசோலை, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது
    • இந்து நாடார் மகிமை கமிட்டி ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்தியன் இளைஞர் சுய உதவி குழுவின் 16-வது ஆண்டு விழா மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் காசோலை, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்து நாடார் மகிமை கமிட்டி ஊர் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார்.

    காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பீர்கான், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ், உதவி தலைமை ஆசிரியர், சுய உதவி குழு தலைவர் கனகராஜ், ஏ.எம்.சமுத்திரம் இந்தியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ராஜேஷ்குமார், சங்கர நாராயணன், கண்ணன், ராதாகிருஷ்ணன் வி.ஏ.ஓ., தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் விஷாந்த், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரக் ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய இளைஞர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏ.எம். சமுத்திரம், மாரியப்பன், ஆறுமுகசாமி, குமரேசன், அய்யப்பன், வேல்முருகன், ஜெயராஜ் ,நாகராஜ் வேலாயுதம், மாரியப்பன், காளிமுத்து, மாடசாமி முருகன், மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆசிரியர் நாகரத்தினம் நன்றி கூறினார். 

    • கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார்.
    • வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். கடந்த சில மாதங்களாக குழுவில் கண்ணதாசன் பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணதாசன் மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் வளர்மதி, பழனிவேல், சந்துரு, சாரதி மற்றும் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் கண்ணதாசன், காளிமுத்து என 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • 100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் வட்டார அளவிலான 100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மதுரை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் காளிதாசன் வழங்கினார். இதில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள சுய உதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வங்கிகளின் கிளை மேலாளர்கள் கலந்து கொண்டு காசோலைகளை மகளிர் குழுவினருக்கு வழங்கினர். இந்த நிகழ்வில் மகளிர் குழுக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், இயற்கை உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
    • இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் வெள்ளப்பாண்டி வரவேற்றார். இதில் ஊமச்சிகுளம் இந்தியன் வங்கி கிளை மேலாளர், பொதும்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 62 குழுக்களுக்கு ரூ.3.46 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. 23 குழுக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் தர மதிப்பீடு செய்யப்பட்டது. முடிவில் உதவி திட்ட அலுவலர் மரியா மகதேவ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பரமத்தி வேலூரில் ரூ.48 லட்சம் மோசடி, வங்கி ஊழியர்களை கண்டித்து சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
    • இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் தொடங்க கடன் பெற்றுள்ளனர். கடனை மாதந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுவினர் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் வங்கி மூலமாக சுய உதவிக் குழுவினரிடம் பணம் வசூல் செய்வதற்காக தற்காலிக வணிக தொடர்பாளராக சரண்யா, ஹோமா ஆகிய இரு பெண்கள் நியமிக்கப்பட்டு சுய உதவிக் குழுவினரிடம் மாதமாதம் பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருவரும் 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்ததை அறிந்த மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வங்கி மேலாளர் அழகரசனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அழகரசன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக கூறி காலதாழ்த்தி வந்துள்ளார். வங்கி கிளை மேலாளர் அழகரசன் பணிமாறுதல் சென்றதை அறிந்த பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவை பெண்கள் இந்தியன் வங்கி முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல் ஆய்வாளர் வீரம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் வங்கியில் உள்ள உதவி மேலாளர் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.

    மனுவில், மோசடி செய்த சரண்யா, ஹோமா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் வங்கி மேலாளர் அழகரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

    புகார் மனுவை பெற்ற சுப்பிரமணியம் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி விசாரணை நடத்த கூறியதையடுத்து பெண்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • வேளாண் துறை வருவாய் இணைந்து பயிர் சாகுபடி பரப்பினை சரியாக ஒத்திசைவு செய்திட கேட்டுக்கொண்டார்.
    • விக்ரமம் வி.ஏ.ஓ.விடம் சாகுபடி பரப்பு எவ்வாறு ஒத்திசைவு செய்யப்படுகிறது அடங்களில் சாகுபடி பரப்புகள் பிரதி மாதம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்பதை குறித்து பதிவேடுகளை நேரடியாக கேட்டறிந்தார்.

    மதுக்கூர்:

    தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அறிவுரைப்படி தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சிறப்பு அலுவலர் செபஸ்டின் பிரிட்டோராஜ் மதுக்கூர் வட்டாரங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மதுக்கூர் வட்டார ஆய்வின்போது விக்ரமம் பஞ்சாயத்தில் சுயஉதவி குழு மகளிரிடம் கலந்துரையாடி அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள சுயதொழிளல் முன்னே ற்றங்களுக்கு தேவையான அடிப்படை ஆதாரத்துடன் முன்னேறுவது குறித்தும்அவர்க ளுடைய பொருளாதார நிலையை முன்னேற்ற தேவையான விஷய ங்கள் குறித்தும் கலந்துரை யாடினார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன் ராஜு மற்றும் செயற்பொறியாளர்கள் உடனிருந்தனர். பின் விக்ரமம் கிராம கிராம நிர்வாக அலுவலரிடம் சாகுபடி பரப்பு எவ்வாறு ஒத்திசைவு செய்யப்படுகிறது அடங்களில் சாகுபடி பரப்புகள் பிரதிமாதம் பதிவேற்றம் செய்யப்படு கின்றன என்பதை குறித்து பதிவேடுகளை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    வேளாண் துறை வருவாய் இணைந்து பயிர் சாகுபடி பரப்பினை சரியாக ஒத்திசைவு செய்திட கேட்டுக்கொண்டார் பின் வாடியகாடு கிராமத்தில் அங்காடியை ஆய்வு செய்ததுடன் வாடிய காடு துவக்கப்பள்ளியில் உள்ள கழிவறைகளில் தூய்மை மற்றும் நீர் இருப்பு பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் பஞ்சாயத்து வாரியாக நீர் வழித்தடங்கள் இதுவரை தூர்வாரி முடித்தது மற்றும் தூர்வார வேண்டிய விபரங்களை பஞ்சாயத்து வாரியான வரை படங்க ளாக தயாரித்தால் சிறப்பாக இருக்கும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போதுமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கோமதி தங்கம் மற்றும் வேளாண் துணை இயக்கு னர் ஈஸ்வர் மற்றும் சிறப்பு அதிகாரியின் தொடர்பு அலுவலர் திரு ஐயம்பெருமாள் ஆகியோர் உடன் இருந்த னர். வேளாண் துறை ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள்ஜெரால்டு முருகேசு தினேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் திட்ட செயல்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார்.

    ×