

நெல்லை:
தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.
ரூ.61 கோடி கடனுதவி
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் கடனுதவி வழங்கும் விழா நடை பெற்றது. பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்ற விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், உதவி கலெக்டர் கோகுல், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்க பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 400 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.61 கோடி மதிப்பிலான கடனுதவி களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
கண்காட்சி
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பனை பொருட்களின் கண்காட்சியை சபாநாயகர் பார்வையிட்டார்.
முன்னதாக ஸ்டார்ட் - அப் என்ற புத்தாக்க தொழில் என்று புதிதாக பதிவு செய்யப்பட்ட 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சான் றிதழ்கள் வழங்கப்பட்டு, அவர்களின் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.