கடலூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருதரப்பினர் மோதல்

கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
கடலூர் அருகே  பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருதரப்பினர் மோதல்
Published on

கடலூர்:

கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். கடந்த சில மாதங்களாக குழுவில் கண்ணதாசன் பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணதாசன் மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் வளர்மதி, பழனிவேல், சந்துரு, சாரதி மற்றும் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் கண்ணதாசன், காளிமுத்து என 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com