search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவி குழுக்களை தி.மு.க. அரசு நசுக்கி வருகிறது - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    மகளிர் சுய உதவி குழுக்களை தி.மு.க. அரசு நசுக்கி வருகிறது - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    • அ.தி.மு.க. ஆட்சியில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது
    • பொதுத் தேர்வை தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் எழுதவில்லை

    நாகர்கோவில்,

    குமரி மாவட்ட அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நேற்று நடை பெற்றது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் அமைச்சர் பச்சைமால், கழக இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கிழக்கு கழக பகுதி செயலாளர் வக்கீல் ஜெயகோபால் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 28 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தீய செயல்களை நினைவு கூட்டம் என்ற பெயரில் கூட்டம். நடத்தி பிரச்சினையை தி.மு.க. உருவாக்கி உள்ளது.

    தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றவில்லை. தொற்று பாதிப்பு காலங்களில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட வில்லை. குமரி மாவட்டத் தில் உள்ள ஒரு குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை. தண் ணீர் தட்டுப்பாடு உள்ளது. அரசு கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதிலும், பேனா வைப்பதிலும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டு கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக உள்ளது. தி.மு.க.வில் அதிக அளவில் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். எனவே தி.மு.க. என்பதை விட அதி.மு.க. 2-ம் பாகம் என கூறினால் பொருந்தும்.

    பொதுத் தேர்வை தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் எழுதவில்லை. இதுவே தி.மு.க. அரசின் சாதனை ஆகும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண் போலீசாருக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது.

    அ.தி.மு.க. அரசால் கொண்டு வந்த அம்மா உணவகம், அம்மா மருந்தகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களை தி.மு.க. அரசு நசுக்கி வரு கிறது. மக்க ளுக்கான அரசு தி.மு.க. இல்லை. அது குடும்ப அரசாக உள்ளது. ஈரோடு இடைத் தேர்தல் மூலம் தேர்தல் ஆணையம் முழுமையாக தோல்வியடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அவைத் தலைவர் சேவியர் மனோக ரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம், நகர முன்னாள் செயலாளர் சந்துரு, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் அக் ஷயாகண்ணன் நன்றி கூறி னார்.

    Next Story
    ×