காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் விளையாட்டு போட்டி

பள்ளியில் விளையாட்டு தின விழா போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டுதினவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வாலிபால் அசோசியேசன் திருப்பூர் மாவட்ட தலைவரும் எனிடைம் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com