தேசிய விளையாட்டு போட்டி: சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவர் சாதனை

தேசிய விளையாட்டு போட்டியில் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர். இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கார்த்தீஸ்வரன் 
கார்த்தீஸ்வரன் 
Published on

காரைக்குடி

அகில இந்திய வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அரியானா மாநிலம் ஹிஸாரில் உள்ள சி.சி.எஸ். அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அங்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவர் கார்த்தீஸ்வரன் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு வட்டு எறிதல் போட்டியில் 2ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

வெற்றி பெற்ற மாணவருக்கு சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் சேது குமணன், கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com