search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டுப் போட்டி"

    • விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
    • பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது

    மார்த்தாண்டம், அக்.18-

    குமரி மாவட்டம் செந்தறை தனியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ.மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா .பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜோபி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகிளன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூராட்சி உறுப்பினர் அனிதா ராஜகிளன், முன்னாள் மேல்புறம் வட்டாரத் தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
    • நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைதம்பி வழங்கினார்

    மார்த்தாண்டம் :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் 98-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 2 ந்தேதி தொடங்கி யது. 20 நாட்கள் நடைபெற்ற பொருட்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராம திலகம் முன்னிலை வகித்தார்.

    விழாவில் பொருட்காட்சியில் நடைபெற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது.

    மேலும் பொருட்கா ட்சியில் வைக்கப்பட்டிருந்த விவசா யிகளின் விளை பொருட்கள், கைவினைப் பொருட்கள், கண்காட்சி பொருட்கள், ஓவியங்கள் போன்ற வற்றில் சிறந்த பொருட்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பொன்.ஆசை தம்பி பேசும்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிக்கு மட்டும், 2 வருடங்களில் சுமார் ரூ.5 கோடி ஒதுக்கப்ப ட்டுள்ளது. முதலில் ரூ.3 கோடியும், 2-வது முறையாக ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் பைப் பதிக்கும் பணியினால் பணிகள் சரியான முறையில் செய்ய முடியாமல் தாமதமாகிவிட்டது.

    இருந்தாலும் எங்களால் முடிந்த அளவுக்கு சாலை களை போட்டு உள்ளோம். அடுத்த வாவுபலி பொரு ட்காட்சி நடைபெறுவதற்கு முன்பு அனைத்து சாலை களையும் கண்டிப்பாக சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    நிறைவு விழா நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, வக்கீல் ஷாஜிகுமார், அரு ள்ராஜ், விஜு, ரெத்தினமணி, சர்தார் ஷா, ரீகன், விஜய லட்சுமி, ரோஸ்லெட், மினி குமாரி, ஆட்லின் கெனில் மற்றும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 23-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
    • கபடி, ஜூடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற உள்ளது.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியில் வருகிற 23-ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், மகளிருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 23-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    அதன்படி, தடகள விளையாட்டில் 100, 200, 400 மீட்டர், ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும், இறகுபந்து விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டிகளும், கபடி, ஜூடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கப்படுகிறது.

    போட்டிகளில் அனைத்து வயது பிரிவு மகளிரும் கலந்துகொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பயனடையலாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது.
    • சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மதுரை மாவட்ட நேரு யுகேந்திரா, போடிநாயக்கன்பட்டி சாஸ்தா மகளிர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    கருப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா தொடங்கி வைத்தார். கபடி, குண்டு, ஈட்டி, வட்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

    இதில் மாணவர் பிரிவில் சர்க்கரை ஆலை பள்ளி கபடி போட்டியிலும், வாடிப்பட்டி தனியார் கல்லூரி மாணவிகள் கைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் பரிசு வழங்கினார்.

    நேரு யுவகேந்திரா மாநில இயக்குநர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தனியார் கல்வி அறக்கட்டளை சேர்மன் ஆண்டி, தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி முன்னிலை வகித்தனர்.

    சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார். உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜா, செந்தில்குமார், சந்திரமோகன், வெள்ளைச்சாமி, வசந்தகுமார் ஆகியோர் நடுவராக இருந்தனர். வசந்த் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் 20வது ஆண்டு விளையாட்டி போட்டி நடந்தது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

     சென்னை:

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில 20-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். கருப்பையா முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பா.சிம்மசந்திரன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மாநில பொது செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தடகளம், வாலிபால், டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
    • இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். பின்னர் கல்லூரி மாணவ, மாணவியர்களின் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவுடன் இணைந்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில், கால்பந்து, கையுந்து பந்து, கபடி, மேசை பந்து உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதேபோன்று மாவட்ட அளவிலானப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்று நமது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வீரர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    • நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் சுபத்ரா தேவி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    பொன்னேரி:

    பொன்னேரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே திறமைகளை வெளிப்படுத்தும்விதமாக ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், பலூன் உடைத்தல், சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் சுபத்ரா தேவி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன், ஆசிரியர்கள் அர்ச்சுனன், நிர்மலா, நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜ், வட்டார மைய ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், ஆனந்த், செபஸ்டின் , சிறப்பு பயிற்றுநர்கள் ஆசிரியர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிசம்பர் 3ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பள்ளிக்கல்வி குழு நிர்வாகி மார்க்கெட் தங்கவேல், மற்றும் ஜெகதீஷ்,குட்டி பழனிசாமி, நடராஜன்,துணை தலைமை ஆசிரியர் சசிகலா, மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×