search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheif Minister Cup"

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • முதல் பரிசை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி அணியினர் பெற்றனர்.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மகளிர் கைப்பந்து போட்டி மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் மடத்தூர் கைப்பந்து குழு சார்பாக பள்ளி நிர்வாகி கதிர்வேல் முருகன் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணபாரதி புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளிகள் பிரிவில் முதல் பரிசை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி அணியினரும், 2-ம் பரிசை குறும்பலாபேரி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும், மூன்றாம் பரிசை ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மேல்நிலைப்பள்ளி அணியினரும் பெற்றனர். கல்லூரிகள் பிரிவில் முதல் பரிசை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி அணியினரும், இரண்டாம் பரிசை குற்றாலம் பராசக்தி கல்லூரி அணியினரும், மூன்றாம் பரிசை சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி அணியினரும் பெற்றனர். ஏற்பாட்டினை சரவணசங்கர் மற்றும் இந்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    • தடகள விளையாட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை தென்காசி மாவட்டத்திற்கு பெற்று தரவேண்டும் என கலெக்டர்தெரிவித்தார்.

    தென்காசி:

    தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை 2022-2023-ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் கோப்பை

    இதில் முதல்கட்டமாக தடகள விளையாட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில், அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறுவதற்காக அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கல்வி துறையின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வருகிற பொதுத்தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம், விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் 14 பிரிவுகளில் இன்று முதல் தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    கலந்து கொண்டவர்கள்

    அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை தென்காசி மாவட்டத்திற்கு பெற்று தரவேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, சதன்திருமலைக்குமார், முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் வினு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி யூனியன் சேர்மன் சேக்அப்துல்லா, துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பரமகுரு, இ.சி.ஈ.அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் செந்தூர்பாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பல்வேறு விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×