search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.வி.பி."

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.
    • முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.,டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2022-23ம் கல்வியாண்டில் படிப்பு, விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழில்துறையை சேர்ந்த சிவபிரகாஷ், யுகேபிஎம்.கார்த்திக், சென்னியப்பன், பூபதி, ரமேஷ்குமார், விசித்ரா செந்தில்குமார், மாரிமுத்து கலந்து கொண்டனர்.

    பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணை ப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் விளையாட்டு தின விழா போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டுதினவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வாலிபால் அசோசியேசன் திருப்பூர் மாவட்ட தலைவரும் எனிடைம் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

    • திருமுறை திருக்காவணம் சேலம் ஹரிகர தேசிக சுவாமிகள்” தலைமையில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
    • பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினர்.

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் பாதபூஜை வழிபாடு மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. ஏ.வி.பி. பூண்டி பள்ளியுடன் இணைந்து ஏ.வி.பி கல்வி குழுமங்களான காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி, காந்திநகர் ஏ.வி.பி. (சிபிஎஸ்இ) பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், அரசு பொதுத்தேர்வில் முதன்மை பெறவும் "திருமுறை திருக்காவணம் சேலம் ஹரிகர தேசிக சுவாமிகள்" தலைமையில் பெற்றோர் பாதபூஜை மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினர்.

    மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர். கூட்டு பிரார்த்தனையில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன் , முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்தினர்.

    • இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிரபல விஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட்பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனத்தின் அறிவியலாளரும், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் பிரபலவிஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடையே மனித உடல்உறுப்புகள்,மனிதசெல் பயன்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் நாம்எதிர்கொள்ளும் சவால்கள் , புவி வெப்ப மயமாதல், உலகை ஆளும்அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    முன்னதாகப் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முடிவில் மாணவி கரிஷ்மா மன்ஷாரமணி நன்றி கூறினார்.

    • மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் "உணவுத்திருவிழா'' மிக சிறப்பாககொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவைதுவக்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், கூழ் வகைகள், கலவை சாதம், இனிப்புவகைகள் மற்றும் முளை கட்டிய பயிறு வகைகள் என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர்.

    மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு மாநிலத்தில் விளையும் விளைபொருட்கள் என்னென்ன என்பதை இந்திய வரைப்படம் மூலம் விளக்கினர். விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். விழாவின் நிறைவாக தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு மற்றும் மேலாளர் ராமசாமி மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • பாடத்துடன் கலையை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒருநாள்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • 60க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரிபள்ளியில் ஆசிரியர்களுக்கு பாடத்துடன் கலையை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒருநாள்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சி.பி.எஸ்.இ.யின் முதன்மை பயிற்சியாளர் பரமகல்யாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பாடத்துடன் கலையை இணைத்து மாணவர்களுக்கு கற்றலை கொண்டு செல்வது என்பது தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தினார். சுமார் 60க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்து கொண்டஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ.யின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி.கல்வி குழுமங்களின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் பிரமோதனி வரவேற்றார். முடிவில் பள்ளி ஆசிரியை ரஞ்சிதா நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று ஏ.வி.பி., பள்ளி வெற்றி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்து பந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கைப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், பூப்பந்து இளையோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். டேபிள் டென்னிஸ் இளையோர், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கேரம் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    குறுமைய அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டுப் போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் பிரியாராஜா , பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு , ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
    • கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. அறக்கட்டளை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.

    விழாவில் மாணவர்களுக்கு பகவான் மகாவிஷ்ணு பிறந்தநாளின் சிறப்பையும், வாமனர் அவதரித்த தினமான ஓணத்தின் சிறப்பினையும் மாணவி ரேஷ்மா எடுத்துரைத்தார். கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது. குழந்தைகள் பலர் கேரள பாரம்பரிய உடை அணிந்து மேடையை அலங்கரித்தனர். மக்கள் செழிப்பாக வளமோடு வாழ்கிறார்களா என்பதை காண சிறப்பு தோற்றத்துடன் மகாபலி சக்கரவர்த்தியின் வருகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    • மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
    • இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திக்கேயன் அருள்ேஜாதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திக்கேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலமும், இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி மூலமும் வெளிப்படுத்தினர். முன்னதாக பள்ளியின் மாணவர் மன்ற தலைவி கீர்த்தனா வரவேற்றார். முடிவில் பள்ளியின் மாணவர் மன்ற துணை தலைவி ரிதுமிகா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

    • சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர் புலிகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திக்கேயன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ரவீந்திரன் காமாட்சி கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் பிரமோதினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா மரியாதை செலுத்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புலிகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார். 

    • மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள், உலக இயற்கை பாதுகாப்பு தின நிகழ்ச்சி பள்ளியின் நேச்சர் நியூட்டரர்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.
    • மூலிகை செடிகளின் பயன்களையும், அதனை பாதுகாக்கும் முறைகளையும் விளக்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள், உலக இயற்கை பாதுகாப்பு தின நிகழ்ச்சி பள்ளியின் நேச்சர் நியூட்டரர்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், ஒருங்கிணைப்பாளர் லதா கார்த்திக்கேயன் கலந்து கொண்டனர். கிளப் ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மூலிகை செடிகளை பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் சக்தி மிருதுளா ஆகியோர் வழங்கி மூலிகை செடிகளின் பயன்களையும், அதனை பாதுகாக்கும் முறைகளையும் விளக்கினர்.  

    • தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளி மாணவர்களான ஆகாஷ்குமார், நகுலேஷ் ஆகியோர் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவன் ஆகாஷ்குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்பத்திலும், சண்டை சிலம்ப போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மாணவன் நகுலேஷ் 12 வயதிற்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பிய மாணவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் வரவேற்று பாராட்டினர்.

    பள்ளியின் சார்பில் மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், அருள்ஜோதி, பள்ளி பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் பிரமோதினி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று பாராட்டினர். 

    ×