காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுகள் வழங்கப்பட்ட காட்சி.
விருதுகள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.,டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2022-23ம் கல்வியாண்டில் படிப்பு, விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழில்துறையை சேர்ந்த சிவபிரகாஷ், யுகேபிஎம்.கார்த்திக், சென்னியப்பன், பூபதி, ரமேஷ்குமார், விசித்ரா செந்தில்குமார், மாரிமுத்து கலந்து கொண்டனர்.

பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணை ப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com