திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் பாதபூஜை வழிபாடு

திருமுறை திருக்காவணம் சேலம் ஹரிகர தேசிக சுவாமிகள்” தலைமையில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினர்.
 பாதபூஜை வழிபாடு நடைபெற்ற காட்சி.
 பாதபூஜை வழிபாடு நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர் :

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் பாதபூஜை வழிபாடு மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. ஏ.வி.பி. பூண்டி பள்ளியுடன் இணைந்து ஏ.வி.பி கல்வி குழுமங்களான காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி, காந்திநகர் ஏ.வி.பி. (சிபிஎஸ்இ) பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், அரசு பொதுத்தேர்வில் முதன்மை பெறவும் "திருமுறை திருக்காவணம் சேலம் ஹரிகர தேசிக சுவாமிகள்" தலைமையில் பெற்றோர் பாதபூஜை மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினர்.

மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர். கூட்டு பிரார்த்தனையில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன் , முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com