search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சாதனை"

    • 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.
    • சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை

    மார்த்தாண்டம் :

    நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான 19-வது கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புனித அல்போன்சா கல்லூரி மாணவர் நிஷாந்த் 65 கிலோ எடை பிரிவுக்குட்பட்ட குமித்தே போட்டியில் முதலிடம் பெற்றார்.

    தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் நிஷாந்தையும், இத்தகைய சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் உடற்பயிற்சி இயக்குனர்கள் ஏ.பி.சீலன் மற்றும் பி.அனிஷா ஆகியோரை கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் மற்றும் பேராசிரி யர்கள் வாழ்த்தினர்

    • ஆணழகன் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
    • இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது.

    சிவகாசி

    தமிழ்நாடு அமெச்சூர்பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மிஸ்டர் விருதுநகர் என்ற தலைப்பில் ஆணழகன் போட்டி சிவகாசியில் நடந்தது. இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 70 கிலோ பிரிவில் பி.எஸ்.ஆர்.என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஜெயகணேஷ் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரி இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் முனிராஜ் பேராசிரியை கிருஷ்ணவேனி மற்றும் பலர் பாராட்டினர்.

    • தேசிய விளையாட்டு போட்டியில் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
    • இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    அகில இந்திய வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அரியானா மாநிலம் ஹிஸாரில் உள்ள சி.சி.எஸ். அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

    இதில் 65 பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அங்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

    காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவர் கார்த்தீஸ்வரன் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு வட்டு எறிதல் போட்டியில் 2ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

    வெற்றி பெற்ற மாணவருக்கு சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் சேது குமணன், கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் கரூர் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் அழகம்மாள், ஆங்கில ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவன் பீமா சங்கர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பர்ஸ்ட் ஆசியா மீட்-2022 எங்க் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் லைட் ப்ளே பிரிவில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

    இதன் மூலம் அவர் உலக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டுக் கூட்டமும், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் பள்ளியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். தாளாளர் பேங்க் சுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கி இந்திய அளவில் வெற்றி பெற்றதற்கு தேசியக் கொடியுடன் கூடிய பரிசை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் அழகம்மாள், ஆங்கில ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.

    • ராமநாதபுரம் அருகே 24 மணி நேரம் சுருள்வாள் சுற்றி பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
    • நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது. இதில் 24 மணி நேரம், 24 நிமிடம், 24 நொடிகள் சுருள்வாள் சுற்றி மதுரை தனியார் பள்ளியை ேசர்ந்த பிளஸ்-2 மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். இல்ம் மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி தேவராஜ் வஸ்தாபி சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய சாதனை நிகழ்ச்சியில் மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். அவர் கூறுகையில், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதனை படைத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறேன். எனது முயற்சியை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் நடுவர் ஹரிஹரன் வழங்கினார். இதில் சிலம்பாட்ட கழக ஒருங்கிணைப்பாளர் அருள் அந்தோணி, அந்தோணி பாஸ்டின், பள்ளி தாளாளர் நூருல் அமீன், நிர்வாகிகள் முகம்மது ஆரிப், அண்ணல் முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மதுரை மாணவர் சாதனை படைத்தார்.
    • 2 ஆண்டு உழைப்பால் வெற்றி சாத்தியமானது என்று கூறினார்.

    மதுரை

    இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) ஆயுஷ் (BAMS, BUMS, BHMS) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. இதில் மதுரை கே.கே.நகரை சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா, அகில இந்திய தரவரிசையில் 30-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இவர் மருத்துவ நுழைவுத்தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது தொடர்பாக த்ரிதேவ் விநாயகா கூறியதாவது:-

    நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளை புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.

    அதுவும் தவிர கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு காரணமாக நான் இந்த நிலையை எட்ட முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் திருச்சி சமது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்
    • கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருப்பதோடு, மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது

    திருச்சி:

    தேசிய அளவிலான தடகள் போட்டிகள் ஹரியானாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காஜாநகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவரும், தடகள வீரருமான ஏ.சூராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

    மேலும் 20-வது தேசிய பெடரஷன் கப் ஜூனியர்ஸ் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான தடகள போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார்.

    மேலும் இதன் மூலம் வருகிற 1.8.2022 முதல் 6.8.2022 வரை கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.

    மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை பாராட்டும் வகையில், மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜிமுதீன், பள்ளியின் தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல்,

    பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர் மஜ்லிசுல் உலமா சங்க உறுப்பினர் ஏ.எம்.முகமது ஆஷிக், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×