என் மலர்
நீங்கள் தேடியது "Male competition"
- பெண்களுக்கு ஓபன் பிரிவில் போட்டி நடந்தது. போட்டிகளை செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.
- மிஸ்டராக லாஸ்பேட்டை முகமது இப்ராகிம், புதுவை மிஸ் ஆக சோனாலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை காந்தி திடலில் தமிழ்நாடு, புதுவை ஓபன் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 130-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கு 55 முதல் 85 கிலோ வரை பல பிரிவுகளில் பாடி பில்டர்ஸ் போட்டி, பெண்களுக்கு ஓபன் பிரிவில் போட்டி நடந்தது. போட்டிகளை செல்கணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.
சங்க தலைவர் பிரகதீஸ்வரன், செய லாளர் ஜெய முனுசாமி, பொருளாளர் ஏழுமலை, தமிழ்நாடு செயலாளர் நாகேஷ் பிரசாத் தலைமை யிலான குழுவினர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர்.
பாடிபில்டர்ஸ் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவருக்கு தங்ககாசு, 2-ம் இடம் பிடித்தவருக்கு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
சிறந்த ஆணழகனுக்கு ரூ.10ஆயிரம், புதுவை ஆணழகனுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. சாம்பி யன் ஆப் சாம்பிஷன் பட்டத்தை எல்லை பிள்ளைச்சாவடி பாஸ்கர் பெற்றார்.
புதுவை மிஸ்டராக லாஸ்பேட்டை முகமது இப்ராகிம், புதுவை மிஸ் ஆக சோனாலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- ஆணழகன் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
- இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது.
சிவகாசி
தமிழ்நாடு அமெச்சூர்பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மிஸ்டர் விருதுநகர் என்ற தலைப்பில் ஆணழகன் போட்டி சிவகாசியில் நடந்தது. இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 70 கிலோ பிரிவில் பி.எஸ்.ஆர்.என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஜெயகணேஷ் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரி இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் முனிராஜ் பேராசிரியை கிருஷ்ணவேனி மற்றும் பலர் பாராட்டினர்.






