என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STUDENT ACHIEVE"

    • திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் கரூர் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் அழகம்மாள், ஆங்கில ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவன் பீமா சங்கர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பர்ஸ்ட் ஆசியா மீட்-2022 எங்க் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் லைட் ப்ளே பிரிவில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

    இதன் மூலம் அவர் உலக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டுக் கூட்டமும், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் பள்ளியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். தாளாளர் பேங்க் சுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கி இந்திய அளவில் வெற்றி பெற்றதற்கு தேசியக் கொடியுடன் கூடிய பரிசை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் அழகம்மாள், ஆங்கில ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.

    • குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சென் யோகா வித்யாலயா நடத்திய மாநில அளவிலான சதுரங்கப் போட்டி.
    • வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சென் யோகா வித்யாலயா நடத்திய மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டனர்.

    மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியின் பொதுப் பிரிவில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் சாய் கணேஷ், முகமது அப்துல்லா, முகிலன், இஷாந்த் ராகவன், மாணவி மினிபா ஜிகன், ஹம்சினி முதலிடத்திலும் மாணவி சஹானா சைனப், ஜீவிகா தீபஸ்ரீ, அரோப்ளசிடா, மர்சியா, விஜோலின் ஆசினி, ஹர்ஷினி, மாணவன் முகமது ஜஸிம், சர்ப்ராஸ் அல் முகமது, தருண் பிரசாத் இரண்டாவது இடத்திலும், மாணவி அஜ்வா மரியம், சாய் ஸ்ரீஜா, சுபிக்ஸா மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    சாம்பியன்ஷிப் பிரிவில் ஹம்சினி, முகமது அப்துல்லா மற்றும் இஷாந்த் ராகவன் முதல் இடத்திலும், அரோப்ளசிடா, முகமது ஜஸிம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீ லட்சுமி 10-ம் வகுப்பு படித்த வருகிறார்.
    • சீன வீராங்கனை சாதனையை 2 நிமிடம் 41 வினாடிகளில் கியூபிக்கினை சரி செய்து அதனை முறியடித்து சாதனை படைத்தார்

    நெல்லை:

    நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீ லட்சுமி 10-ம் வகுப்பு படித்த வருகிறார். இவர் கியூபிக் கன சதுர போட்டியில் சீன வீராங்கனை எஸ்டென்டியூ 3 நிமிடம் 47 நொடிகள் செய்த கன சதுரத்தை மாணவி ஸ்ரீ லட்சுமி 2 நிமிடம் 41 வினாடிகளில் கியூபிக்கினை சரி செய்து அதனை முறியடித்து சாதனை படைத்தார்.

    மேலும் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் அவர் முயற்சி செய்து வருகிறார். மாணவி ஸ்ரீ லட்சுமியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி உடற்கல்வி ஆசிரியர்கள் பசுங்கிளி, கஸ்தூரி, ஆசிரியர்கள் லில்லி, ஜோஸ்பின் உட்பட பலர் பாராட்டினர். 

    • ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் திருச்சி சமது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்
    • கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருப்பதோடு, மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது

    திருச்சி:

    தேசிய அளவிலான தடகள் போட்டிகள் ஹரியானாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காஜாநகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவரும், தடகள வீரருமான ஏ.சூராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

    மேலும் 20-வது தேசிய பெடரஷன் கப் ஜூனியர்ஸ் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான தடகள போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார்.

    மேலும் இதன் மூலம் வருகிற 1.8.2022 முதல் 6.8.2022 வரை கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.

    மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை பாராட்டும் வகையில், மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜிமுதீன், பள்ளியின் தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல்,

    பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர் மஜ்லிசுல் உலமா சங்க உறுப்பினர் ஏ.எம்.முகமது ஆஷிக், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×