மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சென் யோகா வித்யாலயா நடத்திய மாநில அளவிலான சதுரங்கப் போட்டி.வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சென் யோகா வித்யாலயா நடத்திய மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டனர்.

மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியின் பொதுப் பிரிவில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் சாய் கணேஷ், முகமது அப்துல்லா, முகிலன், இஷாந்த் ராகவன், மாணவி மினிபா ஜிகன், ஹம்சினி முதலிடத்திலும் மாணவி சஹானா சைனப், ஜீவிகா தீபஸ்ரீ, அரோப்ளசிடா, மர்சியா, விஜோலின் ஆசினி, ஹர்ஷினி, மாணவன் முகமது ஜஸிம், சர்ப்ராஸ் அல் முகமது, தருண் பிரசாத் இரண்டாவது இடத்திலும், மாணவி அஜ்வா மரியம், சாய் ஸ்ரீஜா, சுபிக்ஸா மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

சாம்பியன்ஷிப் பிரிவில் ஹம்சினி, முகமது அப்துல்லா மற்றும் இஷாந்த் ராகவன் முதல் இடத்திலும், அரோப்ளசிடா, முகமது ஜஸிம் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com