search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணழகன் போட்டி"

    • மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது.
    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மகாலில் மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    போட்டியை ஐ.எப்.எப். செயலாளர் ஜெகந்நாதன், எம்.டி.ஐ.எப்.எப். செயலாளர் தனசேகரன் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் மிஸ்டர் மதுரையாக அகதியன் வெற்றி பெற்றார். மதுரை சிறந்த ஜிம் விருதை அண்ணாநகர் நியூ வேர்ல்ட் ஜிம் உரிமையாளர் தனசேகரனுக்கு கிடைத்தது. மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை மனோஜ்குமார் தட்டி சென்றார்.

    மதுரை மாவட்ட சிறுபான்மை தலைவர் முன்னாபாய், தொழிலதிபர் சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    • ஆணழகன் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
    • இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது.

    சிவகாசி

    தமிழ்நாடு அமெச்சூர்பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மிஸ்டர் விருதுநகர் என்ற தலைப்பில் ஆணழகன் போட்டி சிவகாசியில் நடந்தது. இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 70 கிலோ பிரிவில் பி.எஸ்.ஆர்.என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஜெயகணேஷ் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரி இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் முனிராஜ் பேராசிரியை கிருஷ்ணவேனி மற்றும் பலர் பாராட்டினர்.

    • ஒட்டு மொத்த சாம்பியனாக கடைய நல்லூர் நேஷனல் ஜிம் முதல் இடத்தை பிடித்தது.
    • மாஸ்டர்கள் சண்முக சுந்தரம், குத்தாலிங்கம், சிவராமலிங்கரவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள மேலகரம் பாரத் உடற்பயிற்சி கழகத்தின் 44-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் பாரத் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    போட்டியை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், தொழிலதிபர் பூங்குன்றன் வேலாயுதம், கோமதிநாயகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மாஸ்டர் குத்தாலிங்கம் வரவேற்று பேசினார். நெல்லை வளர்மதி முத்தையா வாழ்த்துரை வழங்கினார்.

    போட்டியில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் மிஸ்டர் தென்காசி மற்றும் ஆடவருக்கான மாடலிங் போட்டியில் 40 கிலோ, 50, கிலோ, 65 கிலோ, 80 கிலோ உடல் எடை பிரிவில் உள்ள ஆணழகன்கள் கட்டழகை காட்டி போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் ஒட்டு மொத்த சாம்பியனாக கடைய நல்லூர் நேஷனல் ஜிம் முதல் இடத்தையும், புளி யங்குடி ராயல் மாஸ்டர் ஜிம் 2-வது இடத்தையும் பிடித்தது. அவர்களுக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவில் மருத்துவர்கள் அப்துல் அஜீஸ், செல்வகணேஷ், காஜாமைதீன், பூங்குன்ற வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    மாஸ்டர் சண்முக சுந்தரம், மாஸ்டர் குத்தாலிங்கம், மாஸ்டர் சிவராமலிங்கரவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் அசோசியேசன் சார்பாக வழங்கப்பட்டது.

    போட்டியில் சண்முக சுந்தரம், போஸ் முத்துப் பாண்டியன், கனல் குமார், தமிழரசன், முகமது ஹீரா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். விழாவில் மாஸ்டர்கள் கணேசன், ஜோதி மாணிக்கம் மற்றும் பாரத் உடற்பயிற்சியின் விளையாட்டு வீரர்கள் என திரளானோர் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்.

    முடிவில் மாஸ்டர் முருகன் நன்றி கூறினார்.

    • அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
    • திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வீரர்களை பாராட்டினார்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் சார்பில் பல்லடத்தில் ஆணழகன் போட்டி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சங்க தலைவர் டைமன்ட் பிரகாஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டி ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் வரவேற்றார். 10 பிரிவுகளில் நடந்த ஆணழகன் போட்டியில் 120 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியனாக திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் முதலிடத்தையும், மங்கலத்தை சேர்ந்த சிற்றரசு இரண்டாமிடத்தையும் வென்றனர். போட்டிகளில் வெற்ற பெற்றவர்களுக்கு திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வீரர்களை பாராட்டினார்.

    • அகில இந்திய போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் பிடித்தார்.
    • அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மத்திய பிரதேச மாநிலம், பூனே நகரில் 71-வது அகில இந்திய அளவிலான போலீசாருக்கான ஆணழகன் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா கலந்து கொண்டார்.

    இவர் 60 கிலோ எடை பிரிவில் மணிப்பூர், உத்தரகாண்ட் வீரர்களை தோற்கடித்து முதலிடம் பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 2019-ம் ஆண்டு நடந்த போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் சிவா முதல் பரிசு பெற்றார். அதன் பிறகு கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் போட்டி நடக்கவில்லை. 2022-ம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டியில் மதுரை சிவா கலந்து கொண்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய ஆணழகன் போட்டியில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற மதுரை போலீஸ்காரர் சிவாவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×