search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி- 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு
    X

    தென்காசியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி- 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

    • ஒட்டு மொத்த சாம்பியனாக கடைய நல்லூர் நேஷனல் ஜிம் முதல் இடத்தை பிடித்தது.
    • மாஸ்டர்கள் சண்முக சுந்தரம், குத்தாலிங்கம், சிவராமலிங்கரவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள மேலகரம் பாரத் உடற்பயிற்சி கழகத்தின் 44-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் மற்றும் பாரத் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    போட்டியை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், தொழிலதிபர் பூங்குன்றன் வேலாயுதம், கோமதிநாயகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மாஸ்டர் குத்தாலிங்கம் வரவேற்று பேசினார். நெல்லை வளர்மதி முத்தையா வாழ்த்துரை வழங்கினார்.

    போட்டியில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் மிஸ்டர் தென்காசி மற்றும் ஆடவருக்கான மாடலிங் போட்டியில் 40 கிலோ, 50, கிலோ, 65 கிலோ, 80 கிலோ உடல் எடை பிரிவில் உள்ள ஆணழகன்கள் கட்டழகை காட்டி போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் ஒட்டு மொத்த சாம்பியனாக கடைய நல்லூர் நேஷனல் ஜிம் முதல் இடத்தையும், புளி யங்குடி ராயல் மாஸ்டர் ஜிம் 2-வது இடத்தையும் பிடித்தது. அவர்களுக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவில் மருத்துவர்கள் அப்துல் அஜீஸ், செல்வகணேஷ், காஜாமைதீன், பூங்குன்ற வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    மாஸ்டர் சண்முக சுந்தரம், மாஸ்டர் குத்தாலிங்கம், மாஸ்டர் சிவராமலிங்கரவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் அசோசியேசன் சார்பாக வழங்கப்பட்டது.

    போட்டியில் சண்முக சுந்தரம், போஸ் முத்துப் பாண்டியன், கனல் குமார், தமிழரசன், முகமது ஹீரா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். விழாவில் மாஸ்டர்கள் கணேசன், ஜோதி மாணிக்கம் மற்றும் பாரத் உடற்பயிற்சியின் விளையாட்டு வீரர்கள் என திரளானோர் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்.

    முடிவில் மாஸ்டர் முருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×