search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri"

    • விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • ராயகிரி, வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின்விநியோகம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. எனவே மின் கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப பட்டது.

    சிவகிரி:

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி, கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற கழகம் ஆகியவைகளின் சார்பாக சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பாக நகர செயலாளர் குருசாமி தலைமையில், நகர தலைவர் பழனி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிரந்தரமான முறையில் தொடர்ந்து சுத்தமான குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அய்யப்பன், அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் ஆயூப்கான், அகில இந்திய பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பிச்சைமணி ஆகியோர் பேசினர்.

    இதனைத்தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட வேண்டும் அவற்றின் மூலம் ஏழை- எளிய மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபுவிடம் அளித்து, இக்கோரிக்கையை சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களின் நலன் வாழ்விற்காக செயல்படுத்த வலியுறுத்தித்தினர்.

    • வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலா ளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், ராயகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் குருசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருத ப்பன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வர வேற்று பேசினார். மாவட்ட மாணவரணி துணை அமை ப்பாளர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் மருது பாண்டியன், வக்கீல் அணி மாவட்ட துணைச்செ யலாளர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான், தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாசு. ஒன்றிய நிர்வாகிகள், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள், சிவகிரி வார்டு செயலா ளர்கள், முன்னாள் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை மாநில மருத்துவர் அணி துணைச் செயலா ளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் செய்திருந்தார்.

    • தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் உள்ளிட்ட பலர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம், சமூக நலத்துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மைய நிர்வாகி ஜெயராணி, ஒருங்கிணைந்த சேவை மையம் சகி, வழக்கு பணியாளர் பானுப்பிரியா, சமூக நல விரிவாக்க அலுவலர் வேலுத்துரைச்சி, ஊர் நல அலுவலர் முத்தாத்தாள் ஆகியோர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி கவுன்சிலர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்து லட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனக ஜோதி, முத்துமாரி மற்றும் அலு வலர்கள், பணி யாளர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் 16 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • எஸ்.எஸ்.அமுதன் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்.

    சிவகிரி:

    தாய்லாந்து நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் எஸ்.எஸ்.அமுதன் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார். சாதனை படைத்த மாணவரை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் செயலாளரும், எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தாளாளருமான எஸ்.டி.முருகேசன் பாராட்டினார்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
    • இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் தவமணி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பாசிரியை சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் மகேஸ்வரி, முத்துலட்சுமி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் தேவிபட்டணம் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களை அந்த சமுதாய பொறுப்பாளர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாடசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக சிவகிரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேவிபட்டணம் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களை அந்த சமுதாய பொறுப்பாளர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தேவிபட்டணம் கிராமத்தில் யாரையாவது சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கிறார் என்று போலீசார் கைது செய்தால் அவர் எந்த சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டவரோ அந்த சமூகத்திற்கு போலீசார் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்காது எனவும், தேவிபட்டணம் கிராமத்தில் சட்ட விரோதமாக யாரேனும் மதுபாட்டில்கள் விற்பனை செய்கிறார் என்று குறிப்பிட்ட சமுதாய பொறுப்பா ளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் போலீசார் அந்த குறிப்பிட்ட நபரை கைது செய்தால் அவர் சார்ந்த சமூகத்தில் இருந்து தேவிபட்டணம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்க வேண்டும்.

    அந்த கடிதத்தின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் மதுபாட்டில்கள் விற்பனை செய்பவரின் வீட்டில் குடிதண்ணீர் மற்றும் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நாட்டாமை தங்கம், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவேந்திரகுல தலைவர் சவுந்தரராஜன், குலாளர் சமுதாய தலைவர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்கராஜ், ராமராஜ், குருசாமி, கனக ஜோதி, கிரேஸி, அழகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
    • தனியார் பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரியில் இருந்து விஸ்வநாதபேரி, தென்மலை, ராயகிரி போன்ற பகுதிகளுக்கு தார் சாலை வசதி இல்லாத காலத்தில் மக்கள், வாகனங்கள், கால்நடைகள் போக்குவரத்து பாதையாகவும், தென்மலை, வடுகபட்டி, ராயகிரி விஸ்வநாதபேரி போன்ற பகுதிகளில் இருந்து சிவகிரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவ - மாணவிகள் கல்வி பயில்வதற்கு சென்று வர முக்கிய பாதையாகவும், தேவிப்பட்டணத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள வனபகுதிகளுக்கும், புஞ்செய் பகுதிகளுக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்காக சென்று வருவதற்காகவும் பயன்படுத்தி வந்த 30 அடி அகலம் கொண்ட பசுப்பாதை என்று அழைக்கப்பட்ட பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.

    சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களை கைப்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதின்பேரில் சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமையில், வாசு தேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், ஊர் நல அலுவலர் தெய்வானை ஆகியோர் முன்னிலையில், சிவகிரி அருகே விஸ்வநாதபேரி தனியார் உயர்நிலைப்பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து சிவகிரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    இதில் மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர வடிவு, தலையாரி வேல்மு ருகன், சர்வேயர் பாண்டி செல்வி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத்தலைவர் காளீஸ்வரி, செயலர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கோம்பை ஆற்றுப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட 5 கிணறுகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது.
    • தற்போது கடுமையான வெயில் காரணமாக 2 கிணறுகளிலும் தண்ணீர் வேகமாக வற்றிவிட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தின் வடக்கு எல்லையான சிவகிரி தாலுகா தலைநகர மாகவும், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், தாலுகா மருத்துவமனை, கருவூலம், பொதுப்ப ணித்துறை அலுவலகம் உள்பட அனைத்து அரசு துறை அலுவலகம் உள்ள சிவகிரி பேரூராட்சி வடக்குசத்திரம், தருமபுரி, கொத்தாடப்பட்டி, சிவரா மலிங்கபுரம், குமாரபுரம் உட்பட 18 வார்டுகளைக கொண்டதாகும். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    5 கிணறுகள்

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கோம்பை ஆற்றுப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட 5 கிணறுகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு வந்த நிலையில் கோடை காலமாக விளங்குவதால் ஏற்கனவே போடப்பட்டுள்ள 5 கிணறுகளில் 2 கிணறுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. 4-வது கிணற்றில் தண்ணீர் ஊற்று மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. மீதி உள்ள 2 கிணறுகள் மூலமாக தண்ணீர் குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு ஊரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கடுமையாக வெயில் காரணமாக 2 கிணறுகளிலும் தண்ணீர் வேகமாக வற்றிவிட்டது. இதனால் தண்ணீர் கலங்க லாக விநியோகம் செய்ய ப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    பேரூராட்சிமன்ற தலைவர் ஆய்வு

    சிவகிரி பேரூராட்சிமன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, கவுன்சிலர்கள் ஆகியோர் குடிநீர் கிணறுகள் உள்ள கோம்பை பகுதியில் சென்று கிணறுகளை ஆய்வு செய்தனர். நீர் விநியோகம் செய்வத ற்கான ஏற்பாடு களை செய்யப்பட்டு ள்ளதாகவும், அனைவருக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் பழுதாகி உள்ள 3 கிணறுக ளையும் சீரமைக்க வேண்டும். ஆனால் போதுமான நிதி இல்லாத நிலை ஏற்பட்டு ள்ளது. தண்ணீர் பிரச்சனை யை தீர்ப்பதற்கு தற்போது லாரி மூலமாக தண்ணீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

    எனினும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு கிணறுகளை சீர்படுத்தி ஆழப்படுத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு வேண்டிய நிதி உதவியை மாவட்ட நிர்வாகம் கொடுக்க வே ண்டும் என இப்பகுதி பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவிழாவில் 576 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • திருவிழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி வட்டாரத்தில் பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

    நேற்று மாலை கிருஷ்ணர், திரவுபதிஅம்மன், அர்ச்சுனர் ஆகிய சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவில் முன்பாக உள்ள திடலில் இருந்து புறப்பட்டு சப்பரத்திற்கு முன்பாகவே சென்று முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 6.30 மணி அளவில் 576 பேர் பூக்குழி இறங்கத் தொடங்கினர். முதலில் கோவில் பூசாரி மாரிமுத்து பூ இறங்கினார்.

    தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக பூக்குழி இறங்கினர். 7.30 மணியளவில் அனைவரும் பூ இறங்கி முடித்தனர்.

    திருவிழாவில் பேரூராட்சி பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர், ராணி கருப்பாயி நாச்சியார் கோவில் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன்,

    உதவியாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ், வீரசேகரன், தலையாரிகள் அழகுராஜா, வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பூக்குழித் திருவிழாவை காண சிவகிரி மற்றும் ராயகிரி, வாசுதேவநல்லூர், தளவாய்புரம், சேத்தூர், கரிவலம்வந்தநல்லூர் போன்ற பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்
    • வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிவகிரி:

    சிவகிரியில் உள்ள திரவுபதி அம்மன்கோவிலில் நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி இல்லத்து பிள்ளைமார் தெருவை சேர்ந்த சரோஜா(வயது 48) என்ற பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதேபோல் சிவகிரி குமாரபுரம் மேலத்தெருவை சேர்ந்த பாஞ்சாலி(45) என்பவரிடம் 5 பவுன், வாசுதேவநல்லூரை சேர்ந்த சுந்தரி(65) என்பவரிடம் 2 பவுன், சிவகிரி மலைகோவில் ரோட்டை சேர்ந்த பாஞ்சாலி(25) என்பவரிடம் 3 பவுன் என மொத்தம் 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக அவர்கள் சிவகிரி போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கோவிலுக்கு வந்திருந்த வடமாநில வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    சிவகிரி:

    சிவகிரி மேலரத வீதி விஸ்வகர்மா மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர இடைக் கமிட்டியின் 34 -வது மாநாடு நடைபெற்றது.

    விவசாய சங்க வட்டார தலைவர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சிவகிரி நகர செயலாளராக பாலசுப்பிரமணியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செம்படைத் தொண்டர்கள் பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்திஜி கலையரங்கம் சென்று அடைந்தது.

    மாலை 6 மணியளவில் காந்திஜி கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர் ராஜகோபால், நகர துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் இசக்கி துரை, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நகர துணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
    ×