யோகாசன போட்டியில் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவர் சாதனை

போட்டியில் 16 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். எஸ்.எஸ்.அமுதன் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்.
யோகாசன போட்டியில் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவர் சாதனை
Published on

சிவகிரி:

தாய்லாந்து நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் எஸ்.எஸ்.அமுதன் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார். சாதனை படைத்த மாணவரை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் செயலாளரும், எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தாளாளருமான எஸ்.டி.முருகேசன் பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com