என் மலர்
நீங்கள் தேடியது "Snatching"
- 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்
- வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவகிரி:
சிவகிரியில் உள்ள திரவுபதி அம்மன்கோவிலில் நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி இல்லத்து பிள்ளைமார் தெருவை சேர்ந்த சரோஜா(வயது 48) என்ற பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதேபோல் சிவகிரி குமாரபுரம் மேலத்தெருவை சேர்ந்த பாஞ்சாலி(45) என்பவரிடம் 5 பவுன், வாசுதேவநல்லூரை சேர்ந்த சுந்தரி(65) என்பவரிடம் 2 பவுன், சிவகிரி மலைகோவில் ரோட்டை சேர்ந்த பாஞ்சாலி(25) என்பவரிடம் 3 பவுன் என மொத்தம் 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் சிவகிரி போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவிலுக்கு வந்திருந்த வடமாநில வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- அமுதா நேற்று இரவு பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அமுதாவிடம் பேச்சுகொடுப்பது போல் வந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.டி.சி.நகரை அடுத்த ஆர்.எஸ்.பி.ஆர். தெருவை சேர்ந்தவர் முருகன். ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். இவரது மனைவி அமுதா (வயது 55). இவர் நேற்று இரவு பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
13 பவுன் நகை
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அமுதாவிடம் பேச்சுகொடுப்பது போல் வந்தனர். திடீரென அவர்கள் அமுதா கழுத்தில் இருந்த 13 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கத்தி கூச்சலிட்டார். அப்பகுதியினர் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவர்கள் தப்பிசென்றனர். கொள்ளை போன நகை மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுதொடர்பாக அமுதா சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் வெங்கட் அம்மாள் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார்.
- மோட்டார் சைக்கிளை காணவில்லை என போலீசில் புகார் செய்ய வந்த போது சிக்கினார்
நெல்லை:
சுத்தமல்லியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வெங்கட்அம்மாள். நேற்று மாலை கணவன், மனைவி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டனர்.
அவர்கள் பேட்டை ரெயில்வே கேட் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் வெங்கட் அம்மாள் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார்.
அவர் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டதால் நிலைதடுமாறி 2 மோட்டார் சைக்கிள்களும் கீழே விழுந்தது. அப்போது தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இது தொடர்பாக அவர்கள் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில்சுத்தமல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என பேட்டை போலீசில் புகார் செய்ய வந்தார்.
விசாரணையில் அவன்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.






