என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூத்துக்குடியில் பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு
  X

  தூத்துக்குடியில் பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமுதா நேற்று இரவு பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அமுதாவிடம் பேச்சுகொடுப்பது போல் வந்தனர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி கே.டி.சி.நகரை அடுத்த ஆர்.எஸ்.பி.ஆர். தெருவை சேர்ந்தவர் முருகன். ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். இவரது மனைவி அமுதா (வயது 55). இவர் நேற்று இரவு பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

  13 பவுன் நகை

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அமுதாவிடம் பேச்சுகொடுப்பது போல் வந்தனர். திடீரென அவர்கள் அமுதா கழுத்தில் இருந்த 13 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கத்தி கூச்சலிட்டார். அப்பகுதியினர் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவர்கள் தப்பிசென்றனர். கொள்ளை போன நகை மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுதொடர்பாக அமுதா சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×