பேட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன் கைது

மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் வெங்கட் அம்மாள் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார்.மோட்டார் சைக்கிளை காணவில்லை என போலீசில் புகார் செய்ய வந்த போது சிக்கினார்
பேட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன் கைது
Published on

நெல்லை:

சுத்தமல்லியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வெங்கட்அம்மாள். நேற்று மாலை கணவன், மனைவி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டனர்.

அவர்கள் பேட்டை ரெயில்வே கேட் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் வெங்கட் அம்மாள் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார்.

அவர் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டதால் நிலைதடுமாறி 2 மோட்டார் சைக்கிள்களும் கீழே விழுந்தது. அப்போது தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இது தொடர்பாக அவர்கள் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில்சுத்தமல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என பேட்டை போலீசில் புகார் செய்ய வந்தார்.

விசாரணையில் அவன்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com