search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonstraion"

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப பட்டது.

    சிவகிரி:

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி, கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற கழகம் ஆகியவைகளின் சார்பாக சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பாக நகர செயலாளர் குருசாமி தலைமையில், நகர தலைவர் பழனி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிரந்தரமான முறையில் தொடர்ந்து சுத்தமான குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அய்யப்பன், அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் ஆயூப்கான், அகில இந்திய பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பிச்சைமணி ஆகியோர் பேசினர்.

    இதனைத்தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட வேண்டும் அவற்றின் மூலம் ஏழை- எளிய மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபுவிடம் அளித்து, இக்கோரிக்கையை சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களின் நலன் வாழ்விற்காக செயல்படுத்த வலியுறுத்தித்தினர்.

    • தூத்துக்குடி வி.வி.டி. சிக்னலில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் பி.ஜி. சங்கர் படுகொலையை கண்டித்து தூத்துக்குடி வி.வி.டி. சிக்னலில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாநில தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார், மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜ், தரவு மேம்பாடு மேற்கு பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வம், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், மாவட்ட மகளிர் அணி தலைவி தேன்மொழி, மாவட்ட துணைத் தலைவர் தங்கம், மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் உஷாதேவி, ஐ.டி. பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், பாலபொய்சொல்லான், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன் மற்றும் மான்சிங், மேற்கு மண்டல தலைவர் சிவகணேசன், கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ்கனி, மண்டல் தலைவர்கள் சிவராமன், மாதவன், ஏரல் ராஜகோபால், ஆழ்வார்திருநகரி ரவிச்சந்திரன் மற்றும் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    ×