search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yoga competition"

    • 14 பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமை களை காண்பித்து அசத்தினர்.
    • பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 8-ம் ஆண்டு மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான யோகா சன போட்டிகள் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, சங்கரன் கோவில், விருதுநகர், சாத்தூர், பெரம்பலூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளி ட்ட பல்வேறு ஊரில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 14 பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் மாண வ- மாணவிகள் ஆர்வ முடன் கலந்து கொண்டு தங்களது திறமை களை காண்பித்து அசத்தினர்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச் செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கி னார். எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், முதல்வர் செல்வராஜ், தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் நகர்மன்ற உறுப்பினர் கவியரசு, முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர், போடு சாமி, பழனிக்குமார், பயிற்சியாளர்கள் சூரிய நாராயணன், சோலை நாராயணன், சந்தனராஜ், ராஜேஷ் அய்யப்பன், கார்த்திக் ராஜா, லட்சுமணன், பேனகா, சண்முக லட்சுமி, புஷ்பரதி, மாரியம்மாள், ஈஸ்வரி, குரு லட்சுமி, நல்லதம்பி, அந்தோணி ராஜ் சதீஷ்குமார், ஆனந்த், தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக்தி, வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. போட்டியை தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பொது பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் ஆர்ட்ஸ்டிக், ரிதமிக் ஆகிய பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் நித்யா, ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் 16 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • எஸ்.எஸ்.அமுதன் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்.

    சிவகிரி:

    தாய்லாந்து நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் எஸ்.எஸ்.அமுதன் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார். சாதனை படைத்த மாணவரை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் செயலாளரும், எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தாளாளருமான எஸ்.டி.முருகேசன் பாராட்டினார்.

    • தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    கம்பம்:

    இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் வருகின்ற ஜூன் மாதம் 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சர்வதேச யோகா போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டிகள் பழனியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில யோகாசன சங்கத் தலைவர் யோகி ராமலிங்கம் பங்கேற்று மாணவ- மாணவிகளை தேர்வு செய்தார்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாண வர்கள் தேர்வு செய்ய ப்பட்டனர். அவர்கள் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட யோகா சங்க தலைவர் துரை ராஜேந்திரன் கூறியதாவது, சர்வதேச யோகா போட்டிகள் கொழும்பில் நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்கும் 14 மாணவ-மாணவிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம். அந்த மாணவர்கள் ஏற்கனவே பலமுறை மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள். மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    • 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர்.
    • திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்,

    திருப்பூர் :

    திருப்பூர் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்.இப்போட்டியில் ரேங்கிங், ஸ்பெஷல் மற்றும் சாம்பியன்ஷிப் போன்ற பல்வேறு பிரிவுகளில் 50 க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர். மிகச்சிறந்த பங்கேற்பிற்கான விருதினையும் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி பெற்றது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பில் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்கு னர் சக்திநந்தன், துணை இயக்குனர் வைஷ்ணவி நந்தன் மற்றும் தலைமை ஆசிரியை சியாமளா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • பரமக்குடி அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றனர்.
    • சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்னவ்(கடல்) யோகா மையம் மூலம் நடத்தப்பட்ட மண்டல அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்றனர்.

    இதில் அனைத்து மாணவர்களும் திறமையை வெளிப்படுத்தி 9 பேர் முதல் பரிசும், 30-க்கும் மேற்பட்டோர் 2-ம் பரிசும், 10-க்கும் மேற்பட்டோர் 3-வது பரிசும் பெற்றனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன் ஆகியோரையும், பரிசு பெற்ற மாணவர்களையும் பள்ளி சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவர்களுக்கு இறுதி போட்டி கோவில்பட்டி அருகே உள்ள ஸ்ரீகரா வித்தியா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் யோகாசனப் பயிற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் வலியுறுத்தும் வகையில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் ட்ரஸ்ட் சார்பில் தென் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இறுதி போட்டி கோவில்பட்டி அருகே உள்ள ஸ்ரீகரா வித்தியா மந்திர் பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீகரா வித்யாலயா மந்திர் பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். சவுத் இந்தியன் கல்சுரல் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். செயலாளர் யுவராஜ் துணைத் தலைவர் லாரன்ஸ் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். பள்ளியின் முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் கோவில்பட்டி நகர தலைவரும், ஞான மலர் பெட்ரோல் பங்க் உரிமையாளருமான மைக்கேல் அமலதாஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தென் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

    தொடர்ந்து யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் மைக்கேல் அமலதாஸ் ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே யோகாவின் முக்கியத்து வத்தை விளக்கிப் பேசினார்.

    யோகா பயிற்சி ஆசிரியர் ஆண்டாள் நன்றி கூறினார்.

    • வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.
    • மாணவர்கள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு பற்றிய 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் 600 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    போட்டியில் பள்ளி மாணவ- மாணவிகள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம், விபரீத தண்டாசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.

    இதில் மாநில அளவில் பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில் தரணி பள்ளி மாணவர்கள் பொதுபிரிவில் 43 தங்கம், 23 வெள்ளி, 8 வெண்கலம், சாம்பியன்ஷிப் பிரிவில் 3 மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் ஆப் சாம்பியன் பட்டத்தை வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், சாம்பியன்ஷிப் பட்டத்தை அரியநாயகிபுரம் ஸ்ரீ லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியும் தட்டிச் சென்றனர். தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் பரிசு பெற்றனர். 2-ம் பரிசை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் தட்டிச் சென்றனர்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தரணி குழுமத்தின் தலைவர் பழனி பெரியசாமி, சேர்மன் சம்பத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். யோகாசன போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தரணி பள்ளி நிர்வாகத்தின் தாளாளர் ராமலிங்கம், தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு உண்டான வழிமுறைகளையும், யோகா பற்றிய விழிப்புணர்வையும், நன்மைகளையும் மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழையும் வழங்கினார்.

    விழாவில் யோகா ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரணா யோகா பயிற்சி பள்ளியின் ஆசிரியரும், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு தென்காசி மாவட்ட செயலாளருமான அருண்குமார் செய்திருந்தார்.

    • 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.
    • தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர்சகோதயா பள்ளிகளுக்கான யோகாசன போட்டி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டஅளவிலான பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.

    இதேபோல தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில், பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியின் 49மாணவ, மாணவிகளில்33 மாணவர்கள் முதல் பரிசும், 14 மாணவர்கள் 2ம்பரிசும் பெற்று சாம்பியன்பட்டம் பெற்றனர்.

    இதில் மாணவி அர்சிதா 138 புள்ளிகளும்,பிரதிஷா 131 புள்ளிகளும் பெற்று இலங்கையில்நடக்கும் யோகாசன போட்டிக்கு தகுதி பெற்றனர்.இதையடுத்து யோகாசன போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர்சிவசாமி, செயலாளர்சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் லாவண்யா ஆகியோர்பாராட்டினர்.

    • தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு
    • மாநில அளவில் சாதனை

    அரக்கோணம்:

    திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் யோகாசன போட்டி நடைபெற்றது.

    இதில் அரக்கோணம் பாரதிதாசனார் கல்வி குழும மாணவர்கள் பவித்ரன், ஆகாஷ் ஆகியோர் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    பாரதிதாசனார் கல்வி குழுமத்தின் இயக்குனர்சுந்தர், முதல்வர் பத்மா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் அனைவரும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.

    • திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகாபோட்டி நடைபெற்றது.
    • மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகாபோட்டி நடைபெற்றது.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிக்கு மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க செயலாளர் நித்தியா ராஜேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

    யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம், துணை தலைவர் ரமேஷ் பட்டேல் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். யோகாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    மண்டல அளவிலான யோகா போட்டியில் 165 மாணவர்கள் பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    பாலாஜி வித்யாபீத், யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் யோகா போட்டி நடந்தது. இதில் புதுவை சுற்றுலாத் துறையின் முதுநிலை மேலாளர் சிதம்பரம், யோகாவுக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி ‘யோகா சேவகா விருது’ வழங்கப்பட்டது.

    ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் டீன் ஆனந்த கிருஷ்ணன், பதிவாளர் சீனிவாசன், யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆனந்த பாலயோகி பவனானி ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர். மண்டல அளவிலான ேயாகா போட்டகளில் 165-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர். சித்திர்பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கத்தின் யோகா நடுவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    சங்க மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன் துணைத் தலைவர் தேவசேனா பவனானி, பொருளாளர் சண்முகம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், மூத்த உறுப்பினர்கள் செந்தில் குமார், லலிதா சண்முகம், கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

    ஏற்பாடுகளை யோகா சிகிச்சை கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் தயாநிதி மற்றும் யோகா ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    ×