யோகாசன போட்டியில் பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை

10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.
சாதனை படைத்த பிரண்ட் லைன் பள்ளி மாணவர்கள். 
சாதனை படைத்த பிரண்ட் லைன் பள்ளி மாணவர்கள். 
Published on

திருப்பூர்:

திருப்பூர்சகோதயா பள்ளிகளுக்கான யோகாசன போட்டி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டஅளவிலான பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.

இதேபோல தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில், பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியின் 49மாணவ, மாணவிகளில்33 மாணவர்கள் முதல் பரிசும், 14 மாணவர்கள் 2ம்பரிசும் பெற்று சாம்பியன்பட்டம் பெற்றனர்.

இதில் மாணவி அர்சிதா 138 புள்ளிகளும்,பிரதிஷா 131 புள்ளிகளும் பெற்று இலங்கையில்நடக்கும் யோகாசன போட்டிக்கு தகுதி பெற்றனர்.இதையடுத்து யோகாசன போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர்சிவசாமி, செயலாளர்சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் லாவண்யா ஆகியோர்பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com