search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State level"

    • மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ மொபைல் கண்காட்சி நாளை தொடங்குகிறது.
    • இந்த தகவலை எக்ஸ்போ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை முதல் 2-ந் தேதி வரை மாநில அளவிலான ஆட்டோ மொபைல் கண் காட்சி (எக்ஸ்போ-2023) நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இண்டஸ்ட்ரீஸ் பெடரேஷன், தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் இணைந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆட்டோ மொபைல் கண்காட்சியை நடத்துகின்றன.

    இந்த ஆண்டு மதுரையில் நாளை முதல் 2-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த எக்ஸ்போவில் இந்தியாவில் உள்ள முன்னணி கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இது தவிர கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் 140 அரங்குகளை அமைக்கின் றன.

    இந்த எக்ஸ்போ மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாகன ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பார்வை யாளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அனுமதி கட்டணம் இல்லை.

    இந்த தகவலை எக்ஸ்போ நிர்வாகிகள் ஏ.சிதம்பரம், ராஜேஸ்வரன், ரவி மற்றும் டி.சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

    • மாநில அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி நடந்தது.
    • சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள அரசு சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கூடைபந்தாட்ட போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

    முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கொரியர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழக முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசினை சோழவந்தான் அணியும், 2-ம் பரிசினை வத்தலகுண்டு அணியும், 3-வது பரிசினை ஜேப்பியார் சென்னை அணியும், 4-வது பரிசினை ஆர்.சி.பி.சி. மதுரை அணியும் பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் பரிசு கோப்பையையும் சன்மானமும் வழங்கினர்.

    சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
    • மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பாக பாரம்பரிய மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியினை நடத்தி வருகிறது.

    இப்போட்டியில் பங்கு பெற பெருந்துறை வட்டாரம் பெத்தாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி உதயகுமார் என்பவர் இயற்கை முறையில் தங்க சம்பா என்னும் பாரம்பரிய ரக சாகுபடி செய்திருந்ததால், அவர் போட்டியில் பங்கு கொள்ள வேளாண்மை த்துறை பெருந்துறை வட்டார அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    அதனைத்தொடர்ந்து பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்த பயிர் விளைச்சல் போட்டி திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மாரியப்பன், ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, விதை சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் மோகனசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி மற்றும் முன்னோடி விவசாயி விவேகானந்தன், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அறுவடையின்போது சராசரி பயிர் எண்ணிக்கை, ஒரு சதுர மீட்டரில் உள்ள பயிர் குத்துக்கள், ஒரு கதிரில் உள்ள நெல் மணிகளின் எண்ணிக்கை 1000 நெல் மணிகளின் எடை ஆகிய கணக்கீடுகள் செய்யப்பட்டன.

    மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சசிகலா, துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.
    • மாணவர்கள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு பற்றிய 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் 600 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    போட்டியில் பள்ளி மாணவ- மாணவிகள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம், விபரீத தண்டாசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.

    இதில் மாநில அளவில் பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில் தரணி பள்ளி மாணவர்கள் பொதுபிரிவில் 43 தங்கம், 23 வெள்ளி, 8 வெண்கலம், சாம்பியன்ஷிப் பிரிவில் 3 மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் ஆப் சாம்பியன் பட்டத்தை வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், சாம்பியன்ஷிப் பட்டத்தை அரியநாயகிபுரம் ஸ்ரீ லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியும் தட்டிச் சென்றனர். தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் பரிசு பெற்றனர். 2-ம் பரிசை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் தட்டிச் சென்றனர்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தரணி குழுமத்தின் தலைவர் பழனி பெரியசாமி, சேர்மன் சம்பத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். யோகாசன போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தரணி பள்ளி நிர்வாகத்தின் தாளாளர் ராமலிங்கம், தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு உண்டான வழிமுறைகளையும், யோகா பற்றிய விழிப்புணர்வையும், நன்மைகளையும் மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழையும் வழங்கினார்.

    விழாவில் யோகா ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரணா யோகா பயிற்சி பள்ளியின் ஆசிரியரும், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு தென்காசி மாவட்ட செயலாளருமான அருண்குமார் செய்திருந்தார்.

    • கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.
    • இந்நிலையில் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் 7.5 ஒதுக்கீட்டில் மாநில அளவில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.

    இவர்கள் பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளனர். இந்நிலையில் ராகுல் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 400 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 5-வது இடமும், பின் தங்கிய வகுப்பு பிரிவில் 2-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    கோகுலும் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 372 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ராகுல் சென்னை மெடிக்கல் கல்லுாரியிலும், கோகுல் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியிலும் சேர்ந்த்துள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் தங்கள் படித்த பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜூ உள்பட ஆசிரியர்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மாநில அளவிலான சிறப்பு சதுரங்க போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
    • போட்டிகளை நெல்லை தெட்சணமாறநாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    மும்பை இந்திய பேனா நண்பர் பேரவையின் இணை அமைப்பான ஐ.பி.எல். செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சிறப்பு சதுரங்க போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

    போட்டிகளை நெல்லை தெட்சணமாறநாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். 3 பிரிவுகளில் 6 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக இசக்கி, சதீஷ்குமார், வைதேகி ஆகியோர் செயல்பட்டனர்.

    முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், சதுரங்க ஆர்வலர் சிவா, செஸ் அகாடமி தலைவர் இசக்கி, சென்னை மாவட்ட சதுரங்க வீரர் ஜெப்ரீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஐ.பி.எல். செஸ் அகாடமி இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

    • ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் மாநில அளவிலான 2 நாள் கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது.
    • போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் சொக்கலிங்கம், ஞானப்பூ நினைவு சுழற்கோப்பைக்கான 2-ம் ஆண்டு மாநில அளவிலான 2 நாள்கோ-கோ விளையாட்டு போட்டி அப்பள்ளியின் மைதான த்தில் நடந்தது.

    இந்தப் போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.வெற்றி பெற்ற அணியின ருக்கு பரிசளிக்கும் விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு பள்ளியின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.பள்ளியின் தாளாளர் புனிதா செல்வி முன்னிலை வகித்தார்.முதல்வர் பிரவீன்குமார் வரவேற்றார்.

    தமிழ் ஆசிரியர் ஜான்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை வனத்துறை சரக அலுவலர் சரவணகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினரை பாராட்டி சான்றிதழ்,பரிசு மற்றும் சுழற்கோப்பையினை வழங்கினார்.

    விளையாட்டு போட்டியினை உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், திலீப்குமார்,சுதா,நிர்வாக அலுவலர் சிவக்குமார், அலுவலக பணியாளர்கள் லட்சுமி,சாந்தி,நர்மதா, செவி லியர் மெர்சி ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா முடிவில் தமிழ் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.

    • ராமநாபுரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கம் கழகம் சார்பில் 34-வது 9 வயதிற்குட்பட்டோர் பொது மற்றும் சிறுமியர்களுக்கான மாநில அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார்.

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளர் எப்ரோம், துணைத் தலைவர் தேவி உலக ராஜ், டைமண்ட் சீ புட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் அன்பழகன், ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர்கள் சண்முக சுந்தரம், ராஜாராம்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 200-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் பாபு, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார் ஆகியோர் செய்தனர்.

    ×