மாநில அளவிலான பாரம்பரிய நெல் ரக பயிர் விளைச்சல் போட்டி

பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும்.
மாநில அளவிலான பாரம்பரிய நெல் ரக பயிர் விளைச்சல் போட்டி
Published on

ஈரோடு:

தமிழ்நாடு வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பாக பாரம்பரிய மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியினை நடத்தி வருகிறது.

இப்போட்டியில் பங்கு பெற பெருந்துறை வட்டாரம் பெத்தாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி உதயகுமார் என்பவர் இயற்கை முறையில் தங்க சம்பா என்னும் பாரம்பரிய ரக சாகுபடி செய்திருந்ததால், அவர் போட்டியில் பங்கு கொள்ள வேளாண்மை த்துறை பெருந்துறை வட்டார அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த பயிர் விளைச்சல் போட்டி திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மாரியப்பன், ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, விதை சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் மோகனசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி மற்றும் முன்னோடி விவசாயி விவேகானந்தன், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அறுவடையின்போது சராசரி பயிர் எண்ணிக்கை, ஒரு சதுர மீட்டரில் உள்ள பயிர் குத்துக்கள், ஒரு கதிரில் உள்ள நெல் மணிகளின் எண்ணிக்கை 1000 நெல் மணிகளின் எடை ஆகிய கணக்கீடுகள் செய்யப்பட்டன.

மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சசிகலா, துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com