search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basketball Tournament"

    • மண்டல அளவிலான 11-வது கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
    • இப்போட்டியில் 9 கல்லூரிகள் பங்குபெற்றன.

    வடவள்ளி,

    ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறி யியல் கல்லூரியில் அண்ணா பல்கலைகழகத்தின் சார்பாக மண்டல அளவிலான 11-வது கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைவர் ஆர்.முருகேசன் மற்றும் துணைத்தலைவர் பி.தமிழரசி முருகேசன் பங்கேற்றனர். இப்போட்டியில் 9 கல்லூரிகள் பங்குபெற்றன. அவற்றுள் முதலாவதாக குமரகுரு பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 50 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.

    கே.ஜி.ஐ.எஸ்.எல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 42 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். ஜி.சி.டி. பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான்காம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

    ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜமூர்த்தி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.  

    • மாநில அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி நடந்தது.
    • சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள அரசு சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கூடைபந்தாட்ட போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

    முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கொரியர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழக முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசினை சோழவந்தான் அணியும், 2-ம் பரிசினை வத்தலகுண்டு அணியும், 3-வது பரிசினை ஜேப்பியார் சென்னை அணியும், 4-வது பரிசினை ஆர்.சி.பி.சி. மதுரை அணியும் பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் பரிசு கோப்பையையும் சன்மானமும் வழங்கினர்.

    சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 23-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
    • வரும் 5-ந் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு, பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 23-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டிகள், பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடக்கிறது. தமிழக கூடைப்பந்து கழக ஒப்புதலுடன் நடக்கும் இப்போட்டிகள், முதல் சுற்றில் நாக் அவுட் முறையிலும், தொடர்ந்து, லீக் முறையிலும் நடக்கிறது. தமிழகத்தின் பிரபல அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 11 அணிகள் என மொத்தம் 35 அணிகள் கலந்துகொள்கின்றன.

    நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான முதல் போட்டியில், சென்னை அரைஸ் அணியும், ஈரோடு எல்.எம்.ஆர். அணியும் மோதின. அதில், சென்னை அரைஸ் அணி, 85:67 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இன்று 2-ந் தேதி காலை நடைபெற்ற 2-ம் நாள் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும், கோவை குமரகுரு கல்லூரிஅணியும் மோதின.

    இதில் 99:85 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை குமரகுரு அணி வெற்றிபெற்றது. வரும் 5-ந் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், திருச்செங்கோடு பி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மன் பரந்தாமன், நாமக்கல் கூடைப்பந்து கழக சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி உள்ளிட்டோர் செய்துள்ளனர். 

    • சோழவந்தானில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
    • இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அரசர் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.

    சோழவந்தான் தி.மு.க. சார்பில் நடந்த இந்த போட்டியில் மதுரை, கோவை, ஏற்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், ெநல்லை, தூத்துக்குடி, வத்தலகுண்டு, திண்டுக்கல், சோழவந்தான் உள்பட 18 அணிகள் கலந்து கொண்டன. இதில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் 3 நாட்கள் நடந்தன.

    நேற்று இரவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர்கள் (சோழவந்தான்) ஜெயராமன், (வாடிப்பட்டி) பால்பாண்டி, துணைத்தலைவர்கள் லதா கண்ணன், கார்த்தி, ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகரச் செயலாளர் கவுன்சிலர் வக்கீல் சத்ய பிரகாஷ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேட யங்களை வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை ஜெ.ஜெ.கூடைப்பந்து போட்டி கிளப் தலைவர் முரளி சோழகர் செய்திருந்தார்.

    • கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து விளையாட்டு போட்டி புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • போட்டியில் தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து விளையாட்டு போட்டி புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    போட்டியில் தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொள்கின்றனர். போட்டியின் முதல் நாளான இன்று கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஜோஸ்மேத்யு வரவேற்றார். புதுவை கூடைப்பந்து சங்க செயலாளர் ரகோத்தமன் வாழ்த்துரை வழங்கினார்.

    புதுவை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறை பேராசிரியை சுல்தானா போட்டியை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் குமார், வீரா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

    • வடமதுரை அரசு பள்ளியில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • போலீசார், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வடமதுரை:

    வடமதுரை போலீஸ் நிலையத்தின் சார்பில் புகையில்லாத உலகம் படைப்போம் விழிப்புணர்வு முகாம் மற்றும் கூடைப்பந்து போட்டி வடமதுரை ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்க்காதேவி தொடங்கி வைத்தார்.

    இதில் வடமதுரை தி.மு.க. நகர செயலாளர் கணேசன், இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன், மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட போலீசார், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    12 அணிகள் பங்கேற்கும் தென் இந்திய கல்லூரிகளுக்கான போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.
    சென்னை:

    மகேந்திரன் நினைவு ஸ்போர்ட்ஸ கிளப் சார்பில் ஐ.எம்.ஏ. ஜுவல்ஸ் (பெங்களூர்) ஆதரவுடன் கே.விஸ்வநாதன் நினைவு கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையேயான அழைப்பு கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி நாளை (15-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.

    சத்யபாமா, இந்துஸ்தான், லயோலா, எம்.சி.சி., ஜெய்ன்பல்கலைக்கழகம், என்.ஐ.டி.டி.சி. (மங்களூர்), எஸ்பி. கல்லூரி (கேரளா) உள்பட 12 கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றன. ‘லீக்‘ மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சமாகும்.

    நாளை மாலை 6 மணிக்கு இந்தப் போட்டியை சுங்க இலாகா தலைமை கமி‌ஷனர் எம்.அஜித்குமார் தொடங்கி வைக்கிறார். மேற்கண்ட தகவலை போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். நிசார் தெரிவித்துள்ளார். #tamilnews
    ×