search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில கூடைப்பந்து போட்டி-சென்ைன, கோவை அணிகள் வெற்றி
    X

    கூடைப்பந்து போட்டி நடந்தபோது எடுத்த படம்.

    மாநில கூடைப்பந்து போட்டி-சென்ைன, கோவை அணிகள் வெற்றி

    • பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 23-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
    • வரும் 5-ந் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு, பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 23-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டிகள், பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடக்கிறது. தமிழக கூடைப்பந்து கழக ஒப்புதலுடன் நடக்கும் இப்போட்டிகள், முதல் சுற்றில் நாக் அவுட் முறையிலும், தொடர்ந்து, லீக் முறையிலும் நடக்கிறது. தமிழகத்தின் பிரபல அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 11 அணிகள் என மொத்தம் 35 அணிகள் கலந்துகொள்கின்றன.

    நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான முதல் போட்டியில், சென்னை அரைஸ் அணியும், ஈரோடு எல்.எம்.ஆர். அணியும் மோதின. அதில், சென்னை அரைஸ் அணி, 85:67 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இன்று 2-ந் தேதி காலை நடைபெற்ற 2-ம் நாள் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும், கோவை குமரகுரு கல்லூரிஅணியும் மோதின.

    இதில் 99:85 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை குமரகுரு அணி வெற்றிபெற்றது. வரும் 5-ந் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், திருச்செங்கோடு பி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மன் பரந்தாமன், நாமக்கல் கூடைப்பந்து கழக சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

    Next Story
    ×