மாநில அளவிலான ஆட்டோ மொபைல் கண்காட்சி

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ மொபைல் கண்காட்சி நாளை தொடங்குகிறது.இந்த தகவலை எக்ஸ்போ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆட்டோ மொபைல் எக்ஸ்போ குறித்து நிர்வாகிகள் ஏ.சிதம்பரம், ராஜேஸ்வரன், ரவி மற்றும் டி.சிதம்பரம் ஆகியோர் பேசினர்.
ஆட்டோ மொபைல் எக்ஸ்போ குறித்து நிர்வாகிகள் ஏ.சிதம்பரம், ராஜேஸ்வரன், ரவி மற்றும் டி.சிதம்பரம் ஆகியோர் பேசினர்.
Published on

மதுரை

மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை முதல் 2-ந் தேதி வரை மாநில அளவிலான ஆட்டோ மொபைல் கண் காட்சி (எக்ஸ்போ-2023) நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இண்டஸ்ட்ரீஸ் பெடரேஷன், தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் இணைந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆட்டோ மொபைல் கண்காட்சியை நடத்துகின்றன.

இந்த ஆண்டு மதுரையில் நாளை முதல் 2-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த எக்ஸ்போவில் இந்தியாவில் உள்ள முன்னணி கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இது தவிர கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் 140 அரங்குகளை அமைக்கின் றன.

இந்த எக்ஸ்போ மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாகன ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பார்வை யாளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அனுமதி கட்டணம் இல்லை.

இந்த தகவலை எக்ஸ்போ நிர்வாகிகள் ஏ.சிதம்பரம், ராஜேஸ்வரன், ரவி மற்றும் டி.சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com