திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான யோகா போட்டி

திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகாபோட்டி நடைபெற்றது.மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
யோகா போட்டியில் கலந்து கொண்டவர்கள்.
யோகா போட்டியில் கலந்து கொண்டவர்கள்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகாபோட்டி நடைபெற்றது.

மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிக்கு மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க செயலாளர் நித்தியா ராஜேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம், துணை தலைவர் ரமேஷ் பட்டேல் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். யோகாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com