search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி
    X

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகோப்பை வழங்கப்பட்ட காட்சி.


    கோவில்பட்டியில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி

    • மாணவர்களுக்கு இறுதி போட்டி கோவில்பட்டி அருகே உள்ள ஸ்ரீகரா வித்தியா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் யோகாசனப் பயிற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் வலியுறுத்தும் வகையில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் ட்ரஸ்ட் சார்பில் தென் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இறுதி போட்டி கோவில்பட்டி அருகே உள்ள ஸ்ரீகரா வித்தியா மந்திர் பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீகரா வித்யாலயா மந்திர் பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். சவுத் இந்தியன் கல்சுரல் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். செயலாளர் யுவராஜ் துணைத் தலைவர் லாரன்ஸ் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். பள்ளியின் முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் கோவில்பட்டி நகர தலைவரும், ஞான மலர் பெட்ரோல் பங்க் உரிமையாளருமான மைக்கேல் அமலதாஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தென் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

    தொடர்ந்து யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் மைக்கேல் அமலதாஸ் ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே யோகாவின் முக்கியத்து வத்தை விளக்கிப் பேசினார்.

    யோகா பயிற்சி ஆசிரியர் ஆண்டாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×