யோகாசன போட்டியில் பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை

50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர். திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்,
கோப்பைகளை வென்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
கோப்பைகளை வென்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்.இப்போட்டியில் ரேங்கிங், ஸ்பெஷல் மற்றும் சாம்பியன்ஷிப் போன்ற பல்வேறு பிரிவுகளில் 50 க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர். மிகச்சிறந்த பங்கேற்பிற்கான விருதினையும் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி பெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பில் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்கு னர் சக்திநந்தன், துணை இயக்குனர் வைஷ்ணவி நந்தன் மற்றும் தலைமை ஆசிரியை சியாமளா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com