search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shot dead"

    ஈராக்கில் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர். #Iraq
    பாக்தாத்:

    சிரியாவை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்டை நாடான ஈராக்கிலும் காலூன்றி, அந்நாட்டின் பல்வேறு நகரங்களை தங்கள் வசமாக்கினர். இதையடுத்து, அமெரிக்க கூட்டுப்படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்தது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஈராக் அரசு அறிவித்தது. எனினும் குறுகிய காலத்திலேயே ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு மீண்டும் காலூன்ற தொடங்கிவிட்டனர். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவன பகுதியான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.

    இந்த நிலையில், அன்பர் மாகாணத்தின் தலைநகர் ரமாடியில் உள்ள அல்-ரசாசா என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

    இந்த தகவலை உறுதிப்படுத்திய ஈராக் ராணுவம், சுலைமான் அகமது முகைதின் கடந்த காலங்களில் அன்பர் மாகாணத்தில் எண்ணற்ற உயிர்களை பலிகொண்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என தெரிவித்தது. எனினும் இந்த சம்பவம் குறித்து ஐ.எஸ். பயங்கர வாத இயக்கம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியை மர்ம நபர்கள் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #WomanSPOshotdead
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியில் வசித்து வந்தவர் குஷ்பு ஜான். மாநில போலீசில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில், இன்று மதியம் 2.40 மணியளவில் வீட்டில் இருந்து குஷ்பு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குஷ்புவை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இந்த தாக்குதலில் குஷ்பு படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #WomanSPOshotdead
    பாலக்காடு அருகே யானைகளை சுட்டு கொன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அமைதி பூங்கா அருகே உள்ள மணலியம்பாடம் வனப் பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் யானை இறந்து கிடந்தது.

    இதனை ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த இரு யானைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணலியம்பாடம் ஜபீர் (35), மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பிஜூ (26) ஆகியோர் இரு யானைகளையும் சுட்டு கொன்றது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தந்தங்களை அறுப்பதற்காக பயன்படுத்திய கட்டிங் எந்திரம், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. யானைகளை கொன்று அதன் தந்தங்களை திருட முயன்றது தெரிய வந்தது. கொல்லப்பட்ட இரு யானைகளையும் மன்னார்காடு கால்நடை டாக்டர் ஷாஜி பிரேத பரிசோதனை நடத்தினார்.

    யானைகளை சுட்டு கொன்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TMCMLAshotdead
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் நடந்த சரஸ்வதி பூஜையில் இன்று பங்கேற்றார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TMCMLAshotdead
    ஓடும் ரெயிலில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி பரிதாபமாக உயிர் இழந்தார். #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி (வயது 53). இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புஜ்-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்தார். ரெயில் காந்திதாம்-சுரஜ்பாரி இடையே வந்த போது, ரெயிலில் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஜெயந்தி பனுசாலியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் நிலைகுலைந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெயந்தி பனுசாலி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் அந்த வழக்கை கடந்த ஆண்டு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead 
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். #Taliban #Afghanistan
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்துக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகானத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்ற ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் பயங்கரவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் ஏராளமான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

    பதில் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ஆயுதங்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றினர். ராணுவத் தரப்பில் ஏற்பட்ட உயிர் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரிய வரவில்லை. #Taliban #Afghanistan 
    பாகிஸ்தான் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கடந்த தேர்தலில் இம்ரான் கானை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருமான சையத் அலி ராசா அபிடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். #Pakistanlawmaker #SyedAliRazaAbidi #Karachilawmaker
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சி பகுதியை சேர்ந்தவர் அலி ராசா அபிடி(46). பிரபல தொழிலதிபரான இவர் முத்தாஹிதா குவாமி அமைப்பு கட்சியின் முக்கிய பிரமுகராக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் கராச்சிக்கு உட்பட்ட 251-வது தொகுதியில் முத்தாஹிதா குவாமி அமைப்பின் சார்பில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 243-வது தொகுதியில் போட்டியிட்ட அலி ராசா அபிடி, தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானிடம் தோல்வி அடைந்தார்.


    பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் முத்தாஹிதா குவாமி அமைப்பில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், கராச்சி நகரின் கயாபான் இ காசி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நேற்றிரவு காரில் வந்த இவரை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிடி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Pakistanlawmaker #SyedAliRazaAbidi #Karachilawmaker
    இலங்கையில் மர்ம நபர்கள் சுட்டதில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #SriLankaFiring

    கொழும்பு:

    இலங்கையின் தென் பகுதியில் தங்காலை குட வெல்ல என்ற துறைமுக நகரம் உள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் அங்கு ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அதில் 4 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 9 பேருக்கு குண்டுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். எதற்காக இந்த சம்பவம் நடந்தது என தெரியவில்லை. கொலையாளிகள் பயன்படுத்தியது டி56 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் என போலீசார் தெரிவித்தனர். #SriLankaFiring

    டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் முன்னாள் ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TataSteel #TataSteelManager
    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் டாடா ஸ்டீல் பிராசசிங் அண்ட் டிஸ்ட்ரிபியூசன் லிமிடெட் (டிஎஸ்பிடிஎல்) நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மூத்த மேலாளர் அரிந்தம் பால் நேற்று மதியம் தனது அறையில் வழக்கமான பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் ஊழியர் விஷ்வாஷ் பாண்டே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அரிந்தம் பாலை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    துப்பாக்கி சத்தம் கேட்டு தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அரிந்தம் பால் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். கொலை செய்துவிட்டு தலைமறைவான விஷ்வாஷ் பாண்டே, 2015 முதல் டிஎஸ்பிடிஎல் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் மேலாளரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #TataSteel #TataSteelManager

    ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #MilitantsAttack #AnilParihar #RajnathSingh
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித். இருவரும் நேற்று இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

    வீட்டின் அருகில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக பிரமுகர் மற்றும் அவரது சகோதரரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சிகரமானது.  மிகவும் துயரத்தை தரக்கூடியது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், அசாமில் உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #MilitantsAttack #AnilParihar #RajnathSingh
    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. #MilitansAttack #BJPLeader
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித்.

    இருவரும் நேறு இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.



    இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பாஜக மாநில செயலாளர் அனில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பொது செயலாளர் அசோக் கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் பல ஆண்டுக்கு பிறகு அரசியல் கட்சி பிரமுகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #MilitansAttack #BJPLeader
    ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்தி 25 வீரர்களின் உயிரை பறித்த பயங்கரவாதி அபு ‌ஷகா மற்றும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Iran #MilitaryParade
    தெக்ரான்:

    ஈரானில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் ஈரானில் அரசுக்கு எதிராக இயங்கும் ஆஷ்வாஸ் தேசிய இயக்கத்தினர் பொறுப்பு ஏற்றனர். இந்த இயக்கம் எண்ணை வளம் மிகுந்த குசஸ்தான் மாகானத்தை பிரித்து தனி நாடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    சன்னி பிரிவினர் மெஜாரிட்டியாக வாழும் வசதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீர நாடுகள் தான் பயங்கரவாதிகளை தூண்டி விட்டு ராணுவ அளிவகுப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஈரான் தலைவர் அயாதுல்லா அலி காமெனி தெரிவித்து இருந்தார். அதை சவுதிஅரேபியாவும், ஐக்கிய அரபு அமிரகமும் மறுத்தன.



    இதற்கிடையே ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்ரவாதிகளை ஈரான் அரசு தேடி வந்தது. அவர்கள் ஈராக்கில் தியாலா மாகானத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதை தொடர்ந்து அங்கு நுழைந்த ஈரான் ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. அதில் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபு ‌ஷகா மற்றும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இவர்களில் அபு ‌ஷகா ராணுவ அணி வகுப்பில் தாக்குதல் நடத்த முக்கிய திட்டம் வகுத்து கொடுத்தவன். #Iran #MilitaryParade
    ×