search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people dead"

    இலங்கையில் மர்ம நபர்கள் சுட்டதில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #SriLankaFiring

    கொழும்பு:

    இலங்கையின் தென் பகுதியில் தங்காலை குட வெல்ல என்ற துறைமுக நகரம் உள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் அங்கு ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அதில் 4 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 9 பேருக்கு குண்டுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். எதற்காக இந்த சம்பவம் நடந்தது என தெரியவில்லை. கொலையாளிகள் பயன்படுத்தியது டி56 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் என போலீசார் தெரிவித்தனர். #SriLankaFiring

    ×