

கேரள மாநிலம் ஷோரனூர் பகுதியில் ரெயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரெயில் மோதியதால் தமிழ்நாட்டைச் சேர்ந்து துப்பரவு பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.