search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Commissioner"

    • போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிசயங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும்.
    • போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல.

    கோவை

    போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிச யங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும். அது தான் இயற்கை.

    அதில் போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல. ஒரு குழந்தையிடம் இருக்கும் எதிர்மறையான விஷயங்களையே மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டி சொல்லி கொண்டிருந்தால் அந்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்படும். செயல் திறனும் நிச்சயம் பாதிக்கும்.

    நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ஒரு விஷயம் எனக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தது. அந்த சம்பவம், 1980-களில் நடந்தது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த சம்பவம், எந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை குறிக்கும் வரலாற்று கண்ணோட்டத்துடன் படம் எடுத்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவது, மக்களை நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் உணர வேண்டும்.

    இவ்வளவு கொடுமையானதா போலீஸ் துறை என்றும் இன்னும் மாறவே இல்லையா என்றும் பலருக்கு தோன்றுகிறது. இத்தகையாக தவறான எண்ணம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
    • பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை :

    சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.

    பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

    இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-

    லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.

    லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.

    அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.

    தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை

    லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.

    • தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பது என்பது முழுமையாக தடை செய்யப்படவில்லை.
    • காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    கோவை,

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி, தீபாவளியன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியி ட்ட செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பது என்பது முழுமையாக தடை செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளவாறு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். ஆண்டிமணி, லித்தியம், மெர்குரி, ஆர்செனிக், காரீயம், பேரியம் உப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

    பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்க வேண்டும், வெடிக்க வேண்டும். சரவெடிகள் விற்பதும், வெடிப்பதும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. உரிமம் வழங்கப்பட்ட விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும். பட்டாசு விற்பனையாளர்கள் பெட்ரோலியம், வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்துகள் அடங்கிய மற்றும் ஒலியை எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    அமைதிப்பகுதிகள் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்ஸ், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், கோவில் வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசு கடைகளில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்படும் இடங்களிலும், விற்பனை செய்யும் இடங்களிலும் போதிய அளவில் தீயணைப்புக் கருவிகள், தண்ணீர், மணல் வாளிகள் ஆகியவற்றை விற்பனையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரி, பெட்ரோல் பங்க், பிறவகை எரிபொருள் நிரப்பும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய துணிமணிகள் விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

    போக்குவரத்து உள்ள சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. ராக்கெட் பட்டாசுகளை திறந்த இடங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும். டிரான்ஸ் பார்மர் உட்பட மின்கடத்திகள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக் கக்கூடாது.

    அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும், பொறுப்பில்லாமலும், விளையாட்டுத் தனமா கவும், குடிபோதையிலும் பட்டாசுகளை வெடித்து அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சொத்துகளுக்கு தீங்கு மற்றும் சேதம் ஏற்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி தன்னிச்சையாக, கீழ்படியாமல் நடந்து கொள்பவர்கள் மீது தக்க குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து வணிக வளாகங்கள், நகை, ஜவுளிக்கடைகள், உணவகங்கள், மால்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில் சி.சி.டி.வி காமிராக்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாக போலீஸ் தகவல்.

    கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தற்போது சதாம் உசேன் துடியலூர் பி.எப்.ஐ. அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார், இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் இவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ளவர்களை போலீஸ் தேடி வருகிறது என்றும்  காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

    • மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் விசாரணை.
    • மீதி உள்ள வழக்குகளிலும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த 23 ம் தேதி மதியம் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

    அதே நாள் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கிலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு சேகரிப்பு மற்றும் சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் புலன் விசாரணை நடைபெற்றது.

    இந்த வழக்குகளில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ் (34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பாளர்களாக உள்ளனர். விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு இவர்கள் அனுப்பப்படுவர்.

    கோவை நகரில் இதுபோன்ற ஆறு வழக்குகளும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. மீதி உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். கூடிய விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
    • அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக அறிவித்ததுடன், விளம்பரம் செய்ததற்கு மன்னிப்பும் கோரியது. முன்னதாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதில், தனியார் ஓட்டல் சார்பில் கலாசார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கலாசார சீரழிவு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை அனுமதிக்கக்கூடாது. தவறான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    • இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
    • போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.ஜி. பாபு மாற்றப்பட்டு புதிய போலீஸ் கமிஷனராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர கமிஷனராக பொறு–ப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாநகரில் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அதேபோல் இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

    அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    சென்னை நகரில் ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Surveillancecamera #PoliceCommissioner
    சென்னை:

    சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மாநகர் முழுவதும் போலீஸ்துறையின் ‘3-வது கண்’ என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட 199 சாலைகளில் 45 ஆயிரத்து 594 மீட்டர்களில் ஒவ்வொரு 50 மீட்டருக்கு ஒரு கேமராவும், 511 சாலை சந்திப்புகளில் 520 கேமராக்கள், முக்கியமான 16 சாலை சந்திப்புகளில் 112 கேமராக்கள் என மொத்தம் 1,556 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டன.

    இந்த கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் போலீஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குனர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் வரவேற்று பேசினார். இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    விழாவில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

    குற்றச்சம்பவங்களை வேகமாக துப்புதுலக்கவும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தான் காரணம்.



    கண்காணிப்பு கேமராக்கள் பாதுகாப்பிற்கான முதலீடு. இதை செலவு என்று பார்க்க கூடாது. எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளிலும் தெருக்களை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான உணர்வு ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Surveillancecamera #PoliceCommissioner

    தமிழகத்தில் குற்றங்களை தடுக்க வீடு, கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    போரூர்:

    வளசரவாக்கம், ராமாபுரம் போலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய வளசரவாக்கம் சரகத்தில் புதிதாக 1270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை இன்று காலை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

    கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன், உதவி கமி‌ஷனர்கள் சம்பத், ஆரோக்யபிரகாசம், வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், அமுதா, கவுதமன், சந்துரு, ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், வேலுமணி, பிரான்சிஸ் ரூபன், பாலமுரளி, கோகிலா, கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது :-

    50மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமரா என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் எங்களுக்கு அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சரகத்தில் 1270கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் செய்துள்ளதை மனதார பாராட்டுகிறேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஆந்திரா மாநிலத்தில் வைத்து பிடித்தோம் அதற்கு கண்காணிப்பு கேமரா தான் பெரிதும் எங்களுக்கு உதவியாக இருந்தது.

    இதேபோல் சமீபத்தில் பள்ளியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட ஒரு குழந்தையை பள்ளி அருகில் ஒரு சிறிய ஜூஸ் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியால் தான் 5 மணி நேரத்தில் மீட்டோம்.

    நள்ளிரவு பெண்கள் தனியாக சென்று வீடு திரும்பிட பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு அலுவலகம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் மேலும் சாலையை நோக்கி அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதியதாக கண்காணிப்பு கேமராக்க அமைக்கப்படவுள்ளதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். #MarinaBeach
    சென்னை:

    மெரினா கடற்கரையில் ஆணையாளர் கார்த்திகேயனும், போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் ஆகியோர் அங்கு முறைப்படுத்தப்பட்ட கடைகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகளையும் ஆய்வு செய்தனர்.

    மாநகராட்சியின் சார்பில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் தலா ரூ.84.75 லட்சம் மதிப்பிலான 8 நவீன டிராக்டர் மூலம் இயக்கப்படும் மணல் ஜலிக்கும் இயந்திரங்களை கொண்டு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வியந்திரங்கள் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்ற தேவையற்ற பொருட்களை தனித்தனியே பிரித்தெடுக்கும் திறனையும், மேலும் ஒரு மணிநேரத்தில் 8 ஏக்கர் பரப்பளவுடைய இடத்தை சுத்தம் செய்யும் திறனையும் உடையது.

    கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட 150 புதிய குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

    கடற்கரையை தூய்மைப்படுத்தி, மேலும் அழகுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமி‌ஷனர் தெரிவித்தார்.

    மாநகர காவல் துறையின் சார்பில், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் புதியதாக கண்காணிப்பு கேமராக்களும், உயர்கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்படவுள்ளன எனவும், கடற்கரையில் ரோந்து காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இரவு நேரங்களிலும் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆய்வின் போது துணை ஆணையாளர் (பணிகள்) கோவிந்தராவ், துணை ஆணையாளர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையாளர் சுபோத்குமார், தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) மகேசன், மேற்பார்வை பொறியாளர் (மின்சாரம்) துரைசாமி, மண்டல அலுவலர் அனிதா உடன் சென்றனர். #MarinaBeach
    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் விசுவநாதன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் குற்றங்களை தடுக்க முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராயபுரம் முதல் எண்ணூர் வரை 998 கண்காணிப்பு காமிராக்கள் திருவொற்றியூர் சாலை, எண்ணூர் விரைவுச்சாலை உள்ளிட்ட 11 முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ளன.

    திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் இந்த கண் காணிப்பு காமிராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் மூன்றாவது கண் என்ற பெயரில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதை ஒரு இயக்கமாக செய்து வருகிறோம்.

    இதற்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் உதவி வருகின்றனர்.

    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.

    குற்றங்களை குறைப்பதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் இப்போது பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் தாங்கள் கண்காணிப்பு காமிராவில் கண்காணிக்கப்படுகிறோம். என்ற பயத்துடன் உள்ளனர்.

    கடந்த மாதங்களில் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளன. குற்றவாளிகளுக்கு கண்காணிப்பு காமிரா அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்தை சரி செய்ய உரிய கவனம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×