என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேயர் தினேஷ்குமார்.
இரவு விருந்து நிகழ்ச்சி தனியார் ஓட்டல் மீது போலீஸ் கமிஷனரிடம் மேயர் புகார்
- பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
- அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக அறிவித்ததுடன், விளம்பரம் செய்ததற்கு மன்னிப்பும் கோரியது. முன்னதாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார்.
அதில், தனியார் ஓட்டல் சார்பில் கலாசார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கலாசார சீரழிவு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை அனுமதிக்கக்கூடாது. தவறான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.






