search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சினிமாக்களில் போலீஸ் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம்-கோவை போலீஸ் கமிஷனர் வருத்தம்
    X

    சினிமாக்களில் போலீஸ் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம்-கோவை போலீஸ் கமிஷனர் வருத்தம்

    • போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிசயங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும்.
    • போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல.

    கோவை

    போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    போலீசாரும் சமூகத்தின் ஒரு பகுதியினரே. சமூகத்தின் குறைபாடுகள், குணாதிச யங்கள் அனைத்தும் போலீ சாரிடமும் இருக்கவே செய்யும். அது தான் இயற்கை.

    அதில் போலீசாரை மட்டும் தனியாக பிரித்துப் பார்த்து அவர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல. ஒரு குழந்தையிடம் இருக்கும் எதிர்மறையான விஷயங்களையே மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டி சொல்லி கொண்டிருந்தால் அந்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்படும். செயல் திறனும் நிச்சயம் பாதிக்கும்.

    நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ஒரு விஷயம் எனக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தது. அந்த சம்பவம், 1980-களில் நடந்தது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த சம்பவம், எந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை குறிக்கும் வரலாற்று கண்ணோட்டத்துடன் படம் எடுத்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவது, மக்களை நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் உணர வேண்டும்.

    இவ்வளவு கொடுமையானதா போலீஸ் துறை என்றும் இன்னும் மாறவே இல்லையா என்றும் பலருக்கு தோன்றுகிறது. இத்தகையாக தவறான எண்ணம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×