search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officers"

    • ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு
    • உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை முகப்பு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள், பங்க் கடைகள், டீக்கடைகள் உள்ளன. இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், கதிரவன், ஸ்டாலின், ராஜரத்தினம், அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் முண்டியம்பாக்கத்தில் ஓட்டல்கள், பங்க் கடை, டீக்கடை ஆகிய வற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஓட்டல்களில் சுகாதார மற்ற முறையில், காலாவதியான உணவு பண்டங்களையும், பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்த கூடாத உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஓட்டல்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றாததால் அந்த ஓட்டல்களுக்கு மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அறிவுறு த்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தொட ரும் என ஓட்டல் உரிமையா ளர்களுக்கு எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் கெட்டுப்போன வெஜ் பிரியாணி, பால் பாக்கெட், கீரிம் கேக், குளிர் பானங்கள், தேதி குறிப்பிடா மலும், காலாவதியான பிஸ்கட், உணவு பண்டங்கள் சுமார் 150 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அனைத்தையும் கீழே கொட்டி அழித்தனர்.

    • சரபோஜிராஜபுரம் -வடக்குமாங்குடி சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் கவிதா வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சக்கராப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் சிமெண்ட் சாலை பணிகள், பாய் நெசவு பணி கட்டிடம், வழுத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம், ஆதி திராவிட நல பள்ளி கட்டிடம், சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம், காளான் வளர்ப்பு மையம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம், சரபோஜிராஜபுரம் வடக்குமாங்குடி சாலை பணிகள், கல்வெட்டு பணிகள்,

    ஆதனூர் ஊராட்சியில் சோழங்கநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம், குழந்தை நேய பள்ளி கட்டிடம் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு பொறியாளர் கவிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது உடன் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை விற்பனை குழுவின் சார்பில் இ-நாம் திட்ட வலைதளத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மற்றும் பண்ணை வர்த்தகம் மேற்கொள்வது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை விரிவாக்க அலுவலர்க ளுக்கான தொழில்நுட்ப பயிற்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வரவேற்றார்.

    கூட்டத்தில் இ-நாம் திட்டம் குறித்தும் இத் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பலன்கள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது.

    இ-நாம் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா ஆலோசனை வழங்கினார்.

    இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    • சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வாக்குவாதம்

    கரப்பான் பூச்சியை கோழிக்கறியுடன் சேர்த்து பொறித்தது தெரிய வந்தது. இது குறித்து வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவல்அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அந்த கடைக்கு சென்றனர். அப்போது அந்த சில்லி சிக்கன் கடையை பூட்டி விட்டு அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இன்று கடையை திறக்குமாறு கூறி உள்ளனர். மேலும் இன்று கடைக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.    

    • தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர்.
    • தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாக பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.

    கோவை,

    மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்தல் வேண்டும் என கூறப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள்ளாகவே அடைபட்டு கிடந்தனர். அவர்களும் படித்து நல்ல நிலையை அடைய பலர் போராடினர். போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் பலரும் படித்து பற்பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

    தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து மிக பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள்.

    தாங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரமான கோவையில் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், குற்றம் செய்தவர்களை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    குறிப்பாக எந்தவொரு குற்ற சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.

    தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரிஷ்மா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றி வரும் பிருந்தா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களாகவும் பெண்கள் அதிகளவில் அந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

    அவர்கள் அந்த பதவியில் இருந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பது, குற்ற சம்பவங்களை தடுப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடிக்கடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடமும் குற்ற சம்பவங்கள் குறித்தும், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாகவே ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவை மேற்குமண்டலம் என்பது, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகளுக்கு எல்லாம் ஐ.ஜி.யாக இருந்து எந்தவிதமான குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்பட பல்வேறு வேலைகளை செய்ய வேண்டியது இவரது கடமையாகும்.

    இந்த உயர்ந்த பதவியில் தான் தற்போது பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு அளிப்பதே தனது முக்கிய பணி என தெரிவித்துள்ளார்.

    மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேற்கு மண்டலத்தில் எந்தவித குற்ற சம்பவங்கள் நடந்தாலும், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஐ.ஜி., டி.எஸ்.பி. பதவிகளை தவிர இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பிலும், நிறைய பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இப்படி உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளிலும் கோவை மாவட்ட போலீசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையேயும், பெண்களிடையேயும் அதிகமாக வரவேற்பினை பெற்றுள்ளது. இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், தாமும் இதுபோன்று சாதித்து உயர் பதவியை அடைய ஒரு உந்துதலாகவும் இருக்கும்.

    இதுதொடர்பாக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- கோவையில் போலீஸ் உயர் பதவிகளை பெண்கள் அலங்கரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வரவேற்கத்தக்கது. பெண் போலீஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள், பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புகிறோம். யாருக்கும், யாரும் சளைத்தவர்கள் அல்ல. எல்லோரும் ஒன்று என்ற வழியில் பெண்களாலும் எல்லா துறையிலும் திறம்பட பணியாற்ற முடியும் என்பதையே இது காட்டுகிறது. எனவே அனைத்து பெண்களும் தங்கள் வாழ்வில் சாதித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றனர்.

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மாநகராட்சி சார்பில் மேயர், துணை மேயர் , மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கக் கூடிய நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்ட நிலையில் திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆய்வு கூட்டம் தேதி குறிக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து மாமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.

    இதன் பின்னர் பள்ளி மேலாண்மை குழுவின் உரிமைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    • கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது.
    • இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட் பட்டது ஐந்தாங்கட்டளை கிராமம். ஆலங்குளம் தாலுகா விற்குட்பட்ட இக்கிராமத்தின் தென்புறமாக அமைந்துள்ள பரும்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் நெல்மூட்டைகளை வாங்கி இந்த கொள்முதல் நிலையத்தில் பணியாளர் மூலம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது. மேலும் பல நெல் மூட்டைகள் முளைத்த நிலையில் காணப்படுகின்றன.

    இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகாரிகளின் கண்டுகொள்ளாத நிலையால் பல நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், உயர் அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    • கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
    • இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக் கன்பாளையம் பகுதி கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.

    பெத்தநாயக்கன் பாளை யம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளி பயிர்களில், இலையின் அடிப்பகுதியில் இருந்து சாறு உறிஞ்சி தாக்கும் செம்பேன் சிலந்தி தாக்குதலால், இலைகள் பழுத்து உதிர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது தோட்டக் கலைத் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, பெத்தநாயக்க ன்பாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கோதைநாயகி, உதவி அலுவலர் மதியழகன் மற்றும் ஏத்தாப்பூர் மர வள்ளி ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை பேராசி ரியர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர், பெத்தநாயக்க ன்பாளையம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளித் தோட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து இக்குழுவினர் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கினர். 

    • விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சின்னவாடியில் பணிபுரிந்த சின்ன மூப்பன் பட்டிக்கும், பெரிய பேராளி ராம்கார்த்திக்ராஜா முத்துராமன்பட்டிக்கும், கோட்டையூர் சிவகுமார் அல்லம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அப்பையநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் ரோசல்பட்டிக்கும், சிவஞானபுரம் பாண்டிய ராஜன் விருதுநகருக்கும், புளியங்குளம் அருணகிரி கோட்டைபட்டிக்கும், ஏ.புதுப்பட்டி விவேக் கூரைக்குண்டுவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூரைக்குண்டுவில் பணியாற்றிய கருப்பசாமி ஏ.புதுப்பட்டிக்கும், கோட்டையூர் உமா கணேசன் பெரியபேராளிக்கும், விருதுநகர் ராஜூ அப்பையநாயக்கன் பட்டிக்கும், ரோசல்பட்டி சந்திரசேகர் கோட்டையூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சுதா ராணி புளியங்குளத்திற்கும், முத்துராமன்பட்டி ராஜ லட்சுமி சின்னவாடிக்கும், சின்ன மூப்பன்பட்டி செல்வி சிவஞான புரத்துக்கும் என 14 கிராம நிர்வாக அதிகாரிகள் விருதுநகர் தாலுகா அளவில் இட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

    இதற்கான உத்தரவை சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார் பிறப்பித்துள்ளார்.

    • அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
    • சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    • சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை யில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் நேற்று சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது. அந்த வளரின பருவத் தினரை அதிகாரிகள் மீட்டு குழந்தை தொழிலாளர் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது, 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்த ஒரு பணியிலும் அமர்த்துவதும் குற்றமாகும். மீறி பணியில் அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதம் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்றார்.

    • மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
    • அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேட்டூர்:

    மேட்டூர் போலீஸ் நிலைய உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர், மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலை யங்களில் இந்திய துணை ராணுவமான கோவையில் உள்ள மத்திய அதிவிரைவு பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    மேட்டூர் அணை ஆய்வு

    தமிழக -கர்நாடக எல்லையில் உள்ள இந்த போலீஸ் நிலைய எல்லைக ளில் மத கலவரங்கள் ஏற்பட்டுள்ளனவா? ஏற்ப டக்கூடிய சூழ்நிலை உள்ள னவா? என்றும், மதங்களின் அடிப்படையில் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் இயற்கை பேரி டர் காலங்க ளில் விரைந்து சென்று மீட்புப் பணி மேற்கொள்வது குறித்து காவிர கரை பகுதியி லும், மேட்டூர் அணை பகுதி யிலும் ஆய்வு செய்தனர். அப்போது அதிநவீன துப் பாக்கிகள், மீட்பு உபகர ணங்கள் ஆகியவற்றுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    பரபரப்பு

    அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×