என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayam"

    கடையம் அருகே ஊருக்குள் புகுந்த வன உயிரினங்களை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி லதா என்பவர் வீட்டிற்குள் அரிய வகை உயிரினமான உடும்பு குட்டி ஒன்று பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப் பணியாளர்கள் அங்கு சென்று உடும்பை மீட்டு ஆம்பூர் பீட் வனப்பகுதிக்குள் விட்டனர். நடவடிக்கை எடுத்த கடையம் வனத்துறையினரை பொதுமக்களும் வன ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.

    கடையம் வனச்சரகத்தில் உட்பட்ட மாதாபுரம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக கடையம் வனச்சரக அலுவலர் பொறுப்பு உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு கிடைத்தது. இதையடுத்து வனப் பணியாளர்ள் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
    கடையம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    கடையம்:

    அம்பை அருகே உள்ள அனந்தநாடார்பட்டி, பெரியசாமி பட்டி, இடை கால், பனையன்குறிச்சி, கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை நாலாங்கட்டளையில் உள்ள கல்குவாரி முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    கடையம் ஒன்றிய ச.ம.க. செயலாளர் பெரியசாமி, ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதன் உள்பட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கற்கள் தூக்கி வீசப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    மேலும் குவாரி பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளதால் விவசாயிகளும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாக்குடி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
    கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.
    கடையம்:
     
    கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி சமுதாய நலக் கூடத்தில்  வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி யோகா பயிற்சி கடந்த 60 நாட்காக நடைபெற்று வருகின்றது . 

    சிறப்பு பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் மற்றும் மண்டல தலைவர் அண்ணாமலையார், பேராசிரியர் பழனி, விஜி ஆகியோர் கலந்து கொண்டனர் . 

    யோகா பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயிற்சி இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
    முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கடையம் செல்லப்பிள்ளையார்குளத்தில், தி.மு.க. சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    கடையம்:

     கடையம் அருகேயுள்ள செல்லப்பிள்ளை யார்குளத்தில், தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் நிர்வாகி பழக்கடை நாகராஜன் கட்சி கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். 

    இதில் வக்கீல் மயிலவன், ராஜபூபதி, சாத்தா, ஆறுமுகம், அருணாசலம் என்ற நாகேஷ், சங்கர், முருகன், ரவி, இசக்கி பாண்டி, கடல் மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    கடையத்தில் பாரதியார் சிலை திறப்புக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    கடையம்:

    கடையத்தில் பாரதியாரின் 125-வது திருமணநாள் விழா சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் வருகிற 27-ந் தேதி அன்று கடையத்தில் பாரதியார் -செல்லம்மாள் சிலைத் திறப்புடன் நடைபெற உள்ளது.

    நூலகம் ஒன்று கட்டப்பட்டு அதில் பாரதியார் சிலையும், செல்லம்மா - பாரதி கற்றல் மையம் சேவாலயா சார்பில் 27-ந்தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடையம் பழைய கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கல்யாணி சிவகாமி நாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், தெற்கு கடையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் புளி கணேசன் , மாரி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் லயன்ஸ் கிளப் குமரேசன், ஆசிரியர் கோபால், சேது ராமலிங்கம், சோமசுந்தரம்,சுரேஷ், பாலன் கவியரசன்,சேவாலயா சார்பில் மருத்துவர் கோகுலகிருஷ்ணன், கிங்ஸ்டன், காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர் . சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சந்தனகுமார்(வயது 22). இவருக்கு சமீபத்தில் மீனா(20) என்பவருடன் திருமணமானது.

    சந்தனகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையத்தில் நடைபெற உள்ள ஒரு கோவில் கொடை விழாவிற்கு வரி செலுத்துமாறு ரூ.5 ஆயிரத்தை மீனா தனது கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, சந்தன குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்
    • ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பராமரிக்கப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும் பழக்கன்றுகள் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலர் ஆணைமணி மக்கள் நல பணியாளர் மங்களம், தொழில் நுட்ப உதவியாளர் சிவனேசன் , வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர் ஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு டாக்டர் பரணி குமார், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

    கடையம்:

    கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன்

    எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் வார்டுகள், நோயாளிகள் தங்குவதற்கான அறைகள் கட்டுவதற்கான வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    அரசு டாக்டர் பரணி குமார், ஓ.பன்னீர்செல்வம் அணி புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், கடையம் ஒன்றிய செயலாளர் ராஜவேல், தொழிற்சங்க மண்டல தலைவர் சேர்மத்துரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
    • மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கினார். இதேபோல் பொது நிதியிலிருந்து ரூ.23 லட்சம் ஒதுக்கிய நிலையில் நேற்று முதலியார்பட்டி அரசு பள்ளியினை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் விருதுநகர் மாவட்ட செயலாளர் கதிரவன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, நெல்லை மாநகர பகுதி செயலாளர் காமராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    கடையம்:

    தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    இதில் பெரும்பத்து பொன் ஷீலா பரமசிவன், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, சேர்வைகாரன்பட்டி ரவிச்சந்திரன், தெற்கு மடத்தூர் பிரேமராதா ஜெயம், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, முதலியார்பட்டி அசன் பீவி மைதீன், ரவணசமுத்திரம் உசேன் மற்றும் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கை.
    • கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

    ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மண்பாண்ட தொழிலை நவீனப்படுத்துவது தொடர்பான பணிகள், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்புதூர் கிராம ஊராட்சி மற்றும் மேலாம்பூர் கிராம ஊராட்சிகளில் குளங்கள் தூர்வாரும் பணிகள், கடையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் , கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரூத் ஆடையகம், மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அப்போது அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் சென்றனர்.

    • ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • வெங்கடாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய வட்டார வளர்ச்சி மண்டல அதிகாரி முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர் சுதன், 4-வது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள் மாரிச்செல்வி, முருகேசன், சரோஜா , ஜெயபாரதி, கனகராசாத்தி,செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

    வெங்காடம்பட்டி ஊராட்சி

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி லட்சுமியூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, விஜயா, அம்பிகா , பொருள் செல்வி, விஜயகுமார், சங்கர்ராம், குருசாமி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜனதா, ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் மீனா, ரத்னா பாய், ராமேஸ்வரி, வேளாண்மை துறை கருப்பசாமி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலபணியாளர், பணித்தள பொறுப்பாளர் உறுப்பினர் ,மகளிர் குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பாரத் நன்றி கூறினார்.

    ×