search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Primary Health Centre"

    • முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. இதற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். உடனடியாக அதற்கு தீர்வு காணப்பட்டு இந்த இடத்திலேயே மருத்துவம் பெறக்கூடிய வகையில் ஆரம்ப சுகாதார மையம் அமையவுள்ளது.

    அதனைத்தொடர்ந்து சிவன்மலை ஊராட்சியில் விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் மேல்நிலை தொட்டிகள், சாலை வசதிகள் போன்ற எண்ணற்ற பணிகள் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 11 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும் வழங்கினார். இதில் வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, காங்கயம் வட்டார மருத்துவ அலுவலர் முரளி, கீரனூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அய்யனார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையும் முறையில் பணியாற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆலோசனைகள் வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்து சட்ட விதிக ளுக்கு உட்பட்டு பணியினை சிறப்பாக செய்திட பொறி யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பார்வை யிட்டு பணிகளை விரை வாக முடித்திட அறிவுறுத்தி னார். கட்டிடத்தினை நோயா ளிகளின் பயன் பாட்டிற்கு முறையாக பயன்படுத்தவும் அறிவுறுத்தி னார்.

    மேலும் சுகாதார நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அப்பொழுது தாய்சேய் நல சேவைகளை திறம்பட செய்தி டவும், சுகப் பிரசவ ங்களை அதிகரிக்க வும், ரத்தசோகை உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அயன் சுக்ரோஸ் சிகிச்சை முறையாக வழங்கிடவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையும் முறையில் பணியாற்றவும் ஆலோ சனைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், உதவி திட்ட மேலாளர் டாக்டர் பொன் பத்மநாபன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் நேர்முக உதவி 

    • உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
    • சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் தாய்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் கலந்துகொண்டு தாய்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்.

    இதில் மருத்துவ அலுவலர் அனுசியா, உதவி சித்தம ருத்துவ அலுவலர் அஞ்சுளா தேவி, பல்மருத்துவஅலுவலர் சர்மிளா மற்றும் செவிலி யர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    • முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவர்களுக்கான இலவச சித்தர் யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு உதவும் கர்ப்பகால யோகாசன பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    மூலைக்கரைப்பட்டி:

    முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவர்களுக்கான இலவச சித்தர் யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஏராளமான சிறுவர், சிறுமிகள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    இதுகுறித்து முனைஞ்சிப்பட்டி அரசு சித்த மருத்துவர் வரதராஜன் கூறியதாவது:-

    முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவப்பகுதி சுகாதார மற்றும் நல மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர், சிறுமிகளுக்கான யோகாசன பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    முனைஞ்சிப்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் வந்து பயிற்சி பெறுகின்றனர். மேலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு உதவும் கர்ப்பகால யோகாசன பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    மேலும் வாழ்வியல் நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடற்பருமன் இவற்றை குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் உதவும் சித்தர் யோகா பயிற்சிகள் யோகா பயிற்றுனர் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

    நாங்குநேரி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று உடல்நலனை மேம்படுத்த உதவும் யோகாசன பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு டாக்டர் பரணி குமார், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

    கடையம்:

    கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன்

    எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் வார்டுகள், நோயாளிகள் தங்குவதற்கான அறைகள் கட்டுவதற்கான வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    அரசு டாக்டர் பரணி குமார், ஓ.பன்னீர்செல்வம் அணி புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், கடையம் ஒன்றிய செயலாளர் ராஜவேல், தொழிற்சங்க மண்டல தலைவர் சேர்மத்துரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சராசரி 200 முதல் 300 நோயாளிகள் தினசரி வந்து செல்கின்றனர்.
    • ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1960 ல் ஆரம்பிக்கப்பட்டதாகும். சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதி உள்ளது. சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி போன்ற மருத்துவ பிரிவுகள் உள்ளன. தாய் சேய் நல சிகிச்சை மையம், ஆய்வகம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை, காசநோய் பரிசோதனை, எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இ.சி.ஜி, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் வசதிகள் உள்ளன. இந்த சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் உதவி மருத்துவர்கள் என 6 டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆய்வக நிபுணர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என 30 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு சராசரி 200 முதல் 300 நோயாளிகள் தினசரி வந்து செல்கின்றனர். அப்படி வரும் நோயாளிகளுக்கு யாருக்காவது எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால் எக்ஸ்ரே வசதி இல்லை. எக்ஸ்ரே ஆபரேட்டர் இல்லை. அதனால் நோயாளிகள் காங்கேயம் அல்லது திருப்பூர் பகுதி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெள்ளகோவில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். இங்கு 200க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், ஆயில் மில்கள், விசைத்தறிக்கூடங்கள், அரிசி ஆலைகள் என உள்ளன. இந்த ஆலைகளில் வட மாநில பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். வெள்ளகோவில் பகுதி தொழிலாளர்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனர். ஆகையால் உடனே சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு எக்ஸ்ரே வசதி செய்து கொடுக்க வேண்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×