search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gramasabha"

    • ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது.
    • பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஊட்டி

    எப்பநாடு ஊராட்சியில் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு குத்துவிளக்கேற்றி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    இப்பகுதி மக்கள் மின்சார வசதி வேண்டியும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்துள்ளனா். இவை அனைத்தும் கள ஆய்வு செய்து சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலா்களும், உள்ளாட்சித் துறை அலுவலா்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேலும், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் குழந்தைகளின் நலன் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்கிறது. அதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சாா்பில் உயா் ரத்தஅழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு இரண்டு மாதத்துக்கான மருத்துவப் பெட்டகத்தை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நம் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிலையினை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, எப்பநாடு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நடவு செய்து, பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பாா்வையிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தினையும் வழங்கினாா். அதனை தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், எப்பநாடு ஊராட்சித் தலைவா் சிவகுமாா், உதகை வட்டார மருத்துவ அலுவலா் மரு.முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொ குதிக்குட்பட் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் கொத்த னார் காலனியில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட பல்வேறு பகுதி பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர், ரேசன் பொருட்கள் குறைபாடு, புதிய டிரான்ஸ்பர்மர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்தனர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசுகையில், ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டி ருந்த 23 சென்ட்இடம் மீட்கப் பட்டுள்ளது. அதில் தண்ணீர் தொட்டி உள்பட மக்களுக்கு தேவை யான கட்டமைப்பு களை உருவாக்கவுள்ளோம்.111 கிலோ மீட்டர் தூரம் சாலைஅமைக்கும்பணிகள் நடைபெறவுள்ளது, புதிதாக பல நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

    பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடுக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பபட்டுள்ளது. தாளமுத்துநகர் பகுதியில் மாநகராட்சி இடம் என கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு முள்வேலி அமைக்கப்ப ட்டிருப்பதை நீக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழு மையாக வார்டு உறுப்பி ன ர்களிடம் அவ்வப்போது கேட்கப்பட்டு அந்த குறைகளை தீர்த்து வைக்க ஊராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படுகிறது.

    முன்பு மழைநீர் தேங்கிய பகுதிகளில் இனி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தமிழகத்தின் மிகப்பெரிய ஊராட்சியான இப்பகுதியில் மக்களின் குறை தீர்க்க வாட்ஸ்அப் எண் 81 48 31 17 62 அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம்,எங்களோடு பொதுமக்களும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.தொடர்ந்து 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலண், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டி, பெலிக்ஸ், அரசியல் கட்சியினர் அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • வெங்கடாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய வட்டார வளர்ச்சி மண்டல அதிகாரி முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர் சுதன், 4-வது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள் மாரிச்செல்வி, முருகேசன், சரோஜா , ஜெயபாரதி, கனகராசாத்தி,செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

    வெங்காடம்பட்டி ஊராட்சி

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி லட்சுமியூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, விஜயா, அம்பிகா , பொருள் செல்வி, விஜயகுமார், சங்கர்ராம், குருசாமி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜனதா, ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் மீனா, ரத்னா பாய், ராமேஸ்வரி, வேளாண்மை துறை கருப்பசாமி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலபணியாளர், பணித்தள பொறுப்பாளர் உறுப்பினர் ,மகளிர் குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பாரத் நன்றி கூறினார்.

    ×