என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசிய காட்சி.
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்க வாட்ஸ் அப் எண்- கிராமசபை கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் அறிவிப்பு
- கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொ குதிக்குட்பட் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் கொத்த னார் காலனியில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பல்வேறு பகுதி பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர், ரேசன் பொருட்கள் குறைபாடு, புதிய டிரான்ஸ்பர்மர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்தனர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசுகையில், ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டி ருந்த 23 சென்ட்இடம் மீட்கப் பட்டுள்ளது. அதில் தண்ணீர் தொட்டி உள்பட மக்களுக்கு தேவை யான கட்டமைப்பு களை உருவாக்கவுள்ளோம்.111 கிலோ மீட்டர் தூரம் சாலைஅமைக்கும்பணிகள் நடைபெறவுள்ளது, புதிதாக பல நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.
பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடுக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பபட்டுள்ளது. தாளமுத்துநகர் பகுதியில் மாநகராட்சி இடம் என கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு முள்வேலி அமைக்கப்ப ட்டிருப்பதை நீக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழு மையாக வார்டு உறுப்பி ன ர்களிடம் அவ்வப்போது கேட்கப்பட்டு அந்த குறைகளை தீர்த்து வைக்க ஊராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படுகிறது.
முன்பு மழைநீர் தேங்கிய பகுதிகளில் இனி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தமிழகத்தின் மிகப்பெரிய ஊராட்சியான இப்பகுதியில் மக்களின் குறை தீர்க்க வாட்ஸ்அப் எண் 81 48 31 17 62 அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம்,எங்களோடு பொதுமக்களும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.தொடர்ந்து 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சி துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலண், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டி, பெலிக்ஸ், அரசியல் கட்சியினர் அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






