என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட காட்சி
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு
- கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்
- ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பராமரிக்கப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும் பழக்கன்றுகள் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலர் ஆணைமணி மக்கள் நல பணியாளர் மங்களம், தொழில் நுட்ப உதவியாளர் சிவனேசன் , வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர் ஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story