முதலியார்பட்டி அரசு பள்ளியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.
பள்ளியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.
Published on

கடையம்:

கடையம் யூனியனுக்கு உட்பட்ட முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கினார். இதேபோல் பொது நிதியிலிருந்து ரூ.23 லட்சம் ஒதுக்கிய நிலையில் நேற்று முதலியார்பட்டி அரசு பள்ளியினை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் விருதுநகர் மாவட்ட செயலாளர் கதிரவன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, நெல்லை மாநகர பகுதி செயலாளர் காமராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com