என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கடையத்தில் மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கடையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சந்தனகுமார்(வயது 22). இவருக்கு சமீபத்தில் மீனா(20) என்பவருடன் திருமணமானது.
சந்தனகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையத்தில் நடைபெற உள்ள ஒரு கோவில் கொடை விழாவிற்கு வரி செலுத்துமாறு ரூ.5 ஆயிரத்தை மீனா தனது கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, சந்தன குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.